டிரம்பினை சந்திக்க இருந்த வடகொரிய அதிபரின் திட்டம் ரத்து
அடுத்த மாதம் டிரம்பினை சந்திக்க இருந்த வடகொரிய அதிபரின் திட்டம் ரத்து செய்யபட்டாயிற்று
தென்கொரியா அமெரிக்க கூட்டு ராணுவபயிற்சி நடந்தபின் வடகொரியா தன் வழியே சென்றாயிற்று
இது வேறு , பேச்சுவார்த்தை வேறு என அமெரிக்கா சொன்னாலும் போடா, உன் மூஞ்சிலே முழிக்கமாட்டேன் என சொல்லிவிட்டார் வடகொரிய அதிபர்
இனி வடகொரியா மறுபடி ராக்கெட், அணுகுண்டு என இறங்கினால் அதற்கு ஒரே காரணம் நிச்சயம் அமெரிக்கா மட்டுமே
இந்த சிக்கலும் சீனா இழுத்திருக்கும் புது சிக்கலும் இப்பொழுது உலக ஹாட் டாப்பிக்
என்ன இழுத்தது சீனா?
திபெத்தில் அது தோண்டும் சுரங்கத்தின் தொடர்ச்சியினை அவர்கள் தெற்கு திபெத் என சொல்லும் அருணாசல பிரதேசத்திலும் தோண்ட வந்தாயிற்று
இந்தியா இது எங்கள் பகுதி என சொன்னாலும் சீனா அசையவில்லை, இது பெரும் சிக்கலாகும் என்கின்றார்கள், காரணம் அங்கிருக்கும் எல்லை கோட்டை சீனா அங்கீகரித்ததே இல்லை
மோடியினை தனி படகில் அழைத்து மரியாதை செலுத்தினார் ஜின்பெங், யாருக்கும் கிடைக்கா கவுரவமிது என்றெல்லாம் பக்தாஸ் சொல்லிகொண்டிருந்தார்கள்
தனி படகில் வைத்து வாயிலே மோடியினை சீனர் குத்தியிருப்பார் போல , அதனால் மோடி இதுபற்றி இன்னும் ஒன்றும் சொல்லவில்லை
மறுபடி வடஎல்லை சூடாயிற்று