டிரம்பின் தலைவிதி தெரியும்

இன்னும் சில மணி நேரத்தில் டிரம்பின் தலைவிதி தெரியும்அமெரிக்க சட்டபடி அதிபர் சக்திவாய்ந்தவராயினும் அவர் உச்சகட்ட அழிச்சாட்டியம் மற்றும் பொய் சொன்னால் அவரை பதவியில் இருந்து நீக்க சபைகள் முடிவெடுத்தால் நீக்கலாம்கிளிண்டன் பொய் சொன்னதற்காக இதே நிலையினை எதிர்கொண்டார், அதாவது அவர் மோனிகா லெவின்ஸ்கியுடன் என்ன அரசியல் செய்தார் என்பது விஷயமல்ல மாறாக அவர் மோனிகாவுக்கும் எனக்கும் தொடர்பில்லை என முதலில் சொன்ன பொய்க்கே அமெரிக்கா அதிர்ந்ததுஇப்பொழுது டிரம்ப் மகா அட்டகாசம் செய்வதாகவும் , டிவிட்டரில் நேரம் கழிப்பதாகவும் உலக அரசியலில் சொதப்புவதாகவும் , அமெரிக்க மக்களின் சில துயரங்களை அறியாமல் இருக்கின்றார் என்றும் அவரை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் வந்திருக்கின்றதுஆனாலும் டிரம்ப் ஒரே நாளில் நூற்றுகணக்கான டிவிட்டுகள் செய்து தன் போக்கில் செல்வது வேறு விஷயம்இப்பொழுது தீர்மானம் சபைக்கு வந்தாயிற்று இன்னும் சில மணி துளிகளில் அவர் தலைவிதி தெரியும்இப்பொழுதும் “என்னை யாரும் அசைக்க முடியாது” என டிவிட்டரில் முழங்கி கொண்டிருக்கின்றார் டிரம்ப்