டிரம்ப் அமெரிக்கர்களின் ஹீரோ ஆகிவிட்டார்
டிரம்ப் அமெரிக்கர்களின் ஹீரோ ஆகிவிட்டார், சந்தேகமில்லை அமெரிக்கா அவரை கென்னடிக்கு பின் ஆகசிறந்த துணிச்சலான தலைவராக வாய்பிளந்து பார்த்து கொண்டிருக்கின்றது
ஆம் 1980ல் ஈரானின் அமெரிக்க தூதரகம் தாக்கபட்டு 52 பேர் இரு வருடம் சிறைபிடிக்கபட்டு அமெரிக்காவுக்கு முகத்தில் கரி பூசபட்டது, லெபனானில் இருந்து அமெரிக்கா வெளியேறியது இன்னும் என்னவெல்லாமோ நடந்தது
அன்று ஈரானிடம் ஜிம்மி கார்ட்டரின் அமெரிக்கா தோற்றது, அது வரலாறு
இன்று பாக்தாத் அமெரிக்க தூதரகத்தில் அதே காட்சியினை ஈரான் நடத்தமுயன்றபொழுது சுலைமானியினை போட்டு தள்ளி வரலாற்று களங்கத்தை துடைத்துவிட்டார் டிரம்ப்
ஆம், அமெரிக்கா அளிக்கும் விளக்கம் இப்படித்தான் இருக்கின்றது
சுலைமானி எங்களுக்கு விஷயமே அல்ல, இரையினை குறிவைத்த சிங்கம் அதை நோட்டமிடுவது போல் பார்த்துகொண்டே இருந்தோம், நினைத்தால் எப்பொழுதோ தூக்கியிருப்போம்
ஆனால் தர்மத்தை (!) நாங்கள் மீறமாட்டோம், யுத்தரீதியாக எங்களை சந்திக்காமல் எங்கள் தூதரகத்தை சுலைமானி வீணாக கைவைத்தார் வேறு வழியின்றி கொன்றே விட்டோம்”
பாக்தாத் தூதரகத்தில் கைவைத்து 1980ல் எங்களை அவமானபடுத்தியது போல இப்பொழுதும் திட்டமிட்டால் அமெரிக்காவின் மாபெரும் ஆயுதங்கள் எதற்காக? என கேட்கின்றது அமெரிக்கா
ஈரான் கடும் எச்சரிக்கையுடன் காட்சிகளை நகர்த்துகின்றது
சுலைமானியின் உடல் அடக்கம் செய்யபட்டாயிற்று, புது தளபதி அறிவிக்கபட்டாயிற்று
ஈரான் ஷியாக்களிடையே ஒரு சம்பிரதாயம் உண்டு, யுத்தத்தில் ஒரு ஷியா கொல்லபட்டால் அவன் வீட்டில் ரத்தபழி வாங்குவோம் என சிகப்புகொடி ஏற்றுவார்கள், அதாவது யுத்தம் செய்ய கிளம்பிவிட்டோம் என அதற்கு பொருள்
சுலைமானிக்காக மசூதியிலே வரலாற்றில் முதல் முறையாக ஈரானிய மசூதியில் சிகப்பு கொடி ஏற்றபட்டாயிற்று
ஈரானின் தாக்குதல் ஈராக்குக்குள் வந்து அமெரிக்க முகாம்களை தாக்கும் திட்டம் என சொல்லபட்டாலும், இஸ்ரேல் மற்றும் சவுதி இலக்குகள் மகா முக்கியமாக இருக்கலாம் என்கின்றது செய்திகள்
ஈரான் தந்திரமாக தன் நாட்டில் அல்லாமல் ஈராக்கில் ஈராக் மற்றும் ஹேஸ்புல்லா தீவிரவாதிகள் மூலம் யுத்தத்தை நடத்த போகின்றது
அதாவது இனி ஈராக்கிய கிளர்ச்சிபடையும் அமெரிக்காவும் சண்டையிட்டதாக தோன்றும் பின்னணியில் ஈரான் இருக்கும்
விஷயத்தை யூகித்த அமெரிக்கா ஈரானிய வீரர்கள் ஈரானுக்குள் ஊடுருவியதை கண்டறிந்துவிட்டது
டிரம்ப் மறுபடியும் எச்சரிக்கின்றார், 52 ஈரானிய இலக்குகளை ஒழித்துகட்டுவோம் என சூளுரைக்கின்றார்
அது என்ன 52?
ஆம், 1980ல் கோமேனி சிறைபிடித்த அமெரிக்கர்கள் 52 பேர் கிட்டதட்ட 2 ஆண்டு காலம் அவர்களை வைத்து ஜிம்மி கார்ட்டரிடம் கோமேனி ஆடிய ஆட்டம் கொஞ்சமல்ல
அதை மனதில் வைத்து 52 இலக்குகள் என டிரம்ப் சொல்ல, அமெரிக்கா “வாட் எ பிரசிடென்ட்” என கண்களை துடைத்து கொள்கின்றது
ஈரானிய சிகப்பு கொடி எச்சரிக்கையும், டிரம்பின் எதிர்ப்பு சூளுரையும் பதற்றத்தை அதிகரிக்கின்றது
உலகம் அரேபியாவினை கவனிக்க நாமும் கவனிக்கின்றோம், செய்திகள் வர வர உங்களுக்கும் தருகின்றோம்


