டிரம்ப் என்பவர் இஸ்ரேலின் கைபிள்ளை ஆகிவிட்டார்
கொரிய போரின்பொழுது அமெரிக்க படைகள் தென்கொரியாவில் நிலை கொண்டன, இன்றுவரை நிற்கின்றன
இப்பொழுது கொரியபோர் முடிந்தது என அறிவிக்கபட்டாயிற்று, இனி சண்டை இல்லை என இருவருமே சொல்லிவிட்டார்கள்
இந்நிலையில் அமெரிக்க படைகள் தொடர்ந்து அங்கு ஏன் இருக்க வேண்டும்? என்ற குரல் ஒலித்தது,
விடுமா அமெரிக்கா?
அது கண்களை உருட்ட தென் கொரிய பிரதமர் நமது அமைதிக்கும் அமெரிக்க படைகள் இங்கிருப்பதற்கும் சம்பந்தமில்லை என சொல்லிவிட்டார், இது வடகொரியாவிற்கு அவ்வளவு மகிழ்ச்சியினை கொடுக்கவில்லை
மறுபடியும் சில முணுமுணுப்புகள் வருகின்றன, கொரியர்கள் விரைவில் அமெரிக்க முகாமிற்கு எதிராக போராட்டம் தொடங்கலாம் என்பது உறுதி
இந்த டிரம்ப் என்பவர் இஸ்ரேலின் கைபிள்ளை ஆகிவிட்டார் என கடும் அப்செட்டில் இருக்கின்றன அமெரிக்க சென்ட்.
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே இருந்த ஒப்பந்தபடி செறிவூட்டபட்ட யுரேனியம் குறிப்பிட்ட அளவுதான் இருக்க வேண்டும், அணு ஆயுதம் செய்யகூடாது என பல கட்டுபாடுகள்
இதனை ஈரானும் ஏற்று முன்பு செறிவூட்டபட்ட யுரேனியத்தை ரஷ்யாவிடம் ஒப்படைத்தது
இப்பொழுது டிரம்ப் இல்லை இல்லை ஈரான் அணுகுண்டு செய்கின்றது என அடம்பிடிக்கின்றார்
ஆதாரம் எங்கே என கேட்டால் இஸ்ரேல் கொடுத்திருக்கின்றதாம்
இஸ்ரேலும் பக்கம் பக்கமாக பல பேப்பர்களை காட்டி இதோ ஆதாரம் , எங்கள் உளவுபடை திரட்டியது என காட்டுகின்றது
ஈரானோ உன் உளவுபடை பற்றி தெரியாதா? அது அவர்களே தயாரித்தது என மறுக்கின்றது
ஈரான் தன் அணுவுலைகளை பூமிக்கடியில் அமைத்திருக்கின்றது, வெளியில் இருந்தால் இந்நேரம் இஸ்ரேல் விட்டு வைத்திருக்காது, இது ஆழ சுரங்க ஆலை என்பதால் சிக்கல்
இப்போதைக்கு இஸ்ரேல் கொடுத்த ஆதாரங்களில் டிரம்ப் அணு ஒப்பந்ததை மீறலாம் என்கின்றார்கள், மீறினால் ஈரானும் சும்மா இருக்காது
ஈரான் சீண்டபடுவதை மவுனமாக ரசிக்கின்றது சவுதி மற்றும் இதர நாடுகள்
ஏன் என்றால் ஈரான் ஷியா மட்டுமல்ல, எண்ணெய் பணம் மக்களுக்கே என செயல்படும் நாடு. ஷியா வெறுப்பை விட இரண்டாவது விஷயமே மன்னர்களுக்கு மகா வெறுப்பு, எல்லா எண்ணையும் அரசனுக்கு என்றல்லவா இருக்க வேண்டும்?
இதில் அமெரிக்க சபை சாடுகின்றது, முன்பு இப்படித்தான் சதாம் அழிவு ஆயுதம் வைத்திருக்கின்றார் என இஸ்ரேல் சொன்னதை நம்பி போர் தொடுத்தோம், ஒரு சவரகத்தி கூடகிடைக்கவில்லை
இம்முறையும் அப்படி அவமானபட கூடாது, இஸ்ரேலை நம்பாதீர்கள் என்கின்றார்கள்
பைபிள் அடிமையான , நமது ஊர் அல்லேலூயா கோஷ்டி போன்ற டிரம்ப் கேட்பாரா? அவர் இஸ்ரேல் பக்கமே சரிகின்றார்
ஈரானுக்கும் அவர்களுக்குமான முறுகல் கூடிகொண்டே செல்கின்றது