டிரம்ப் என்ற மனிதரால் ஒரு புல்லையும் புடுங்க முடியாது
டிரம்ப் என்ற மனிதரால் ஒரு புல்லையும் புடுங்க முடியாது, இவரிடம் வேலைபார்ப்பதை விட அலாஸ்கா பக்கம் மாடுமேய்க்க செல்லலாம் என நினைப்போரின் எண்ணிக்கை டிரம்ப் நிர்வாகத்தில் அதிகமாகின்றது.
இப்பொழுது அமெரிக்காவின் 3ம் சக்திவாய்ந்த பதவியான பாதுகாப்புதுறை அமைச்சின் பேட்ரிக் ஷெனகனும் பெவிலியனுக்கு திரும்பிவிட்டார்
குழப்பமான டிரம்போடு அவரால் குப்பை கொட்ட முடியவில்லை என்கின்றது செய்தி
வளைகுடா மற்றும் ஈரானுக்கான அமெரிக்க திட்டங்களின் பொறுப்பாளராக அவர்தான் இருந்தார். ஈரான் மீதான நடவடிக்கையில் ஏற்படும் குழப்பங்கள் அமெரிக்காவின் குழப்பமான நிலை என பல காரணங்கள் அவரின் ராஜினாமா பின்னால் இருக்கின்றன
அமெரிக்காவில் டிரம்பிடம் தாக்குபடிக்க முடியாமல் ஓடுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கின்றது
டிரம்பின் ஜாதகம் அப்படி இருக்கலாம், ஏற்கனவே இரு மனைவியர் ஓடிவிட்ட நிலையில் 3ம் தற்காலிக மனைவிதான் அந்த மெலினா
ஷெனகனின் ராஜினாமா ஈரானுக்கு புதுதெம்பை கொடுத்திருக்கின்றது, அடுத்து யாரை டிர்மப் அமர்த்தபோகின்றார் என உலகம் எதிர்பார்த்திருக்கும் வேளையில், அவர் மட்டும் நிரந்தரமாகவா இருந்துவிட போகின்றார் எனும் குரல்கள் அமெரிக்காவிலே கேட்க தொடங்கியிருக்கின்றன
ஆம் பலர் அப்படி சொல்ல தொடங்கியாயிற்று டிரம்பின் முன்னாள் மனைவியர் உட்பட..
