டிரம்ப் ஏன் இப்படி ஜெருசலேம் விவகாரத்தை இழுக்கின்றார்?

Image may contain: 1 person, smiling, beard, hat and glasses
கிட்டதட்ட 40 ஆண்டுகளாக அமெரிக்கா இஸ்ரேலை அலறவிட்டுகொண்டிருக்கும் ஹசன் நஸ்ருல்லா. மொசாத்தும் சி.ஐ.ஏ வும் இந்த மனிதரிடம் இன்னும் தோற்றுகொண்டே இருக்கின்றன

இந்த டிரம்ப் ஏன் இப்படி ஜெருசலேம் விவகாரத்தை இழுக்கின்றார் என்றால் விவகாரம் எங்கெல்லாமோ சுற்றுகின்றது

இப்போதைய அரேபியாவில் வலுவான அரசுகள் இரண்டேதான் ஒன்று சவுதி இன்னொன்று ஈரான் வேறு எல்லாம் அரண்டு கிடக்கின்றன, ஜோர்டானும் லெபனானும் ஓரளவு அமைதி

இதில் லெபனானில் இருக்கின்றது சிக்கல், என்ன சிக்கல்?

1978ல் இருந்தே லெபனான் இஸ்ரேலுக்கும் இன்னும் சில நாடுகளுக்க்கும் அச்சமூட்டும் விஷயம். காரணம் லெபனான் அல்ல, மாறாக அங்கிருக்கும் ஹிஸ்புல்லா இயக்கம்

1978ல் ஆரம்பிக்கபட்ட அவ்வியக்கம் மற்ற இயக்கங்களை விட மகா வித்தியாசமானது. 1983ல் அங்கி இருந்த அமெரிக்க, பிரான்ஸ் அமைதிபடையினையே விரட்டிய இயக்கம் அது, அதுவும் ஒரு தற்கொலைபடை தாக்குதலில் 250 அமெரிக்க வீரர்களை கொன்றது எல்லாம் மகா பெரும் தாக்குதல்

அமெரிக்க படைமுகாமிற்கு தண்ணீர் கொண்டு செல்லும் லாரியில் வெடிகுண்டை மறைத்து, தண்ணீர் லாரி போல் சென்று அடித்த அடி அது. அன்றே அமெரிக்காவும் பிரான்சும் பெட்டி கட்டின‌

அதன் பின் இஸ்ரேல் அப்பகுதியில் படை நிறுத்தியது, ஆனானபட்ட இஸ்ரேலே ஹிஸ்புல்லாவிடம் தாக்குபிடிக்க முடியாமல் 2000ம் ஆண்டில் வெளியேறியது

2006ல் விமான தாக்குதல் எல்லாம் இஸ்ரேல் நடத்தினாலும் கொஞ்சமும் ஹிஸ்புல்லா அசரவில்லை

இன்றுவரை அமெரிக்கா, இஸ்ரேல் எல்லாம் கண்டு அஞ்சும் இயக்கம் அது, ஈரானின் ஆசி அவர்களுக்கு உண்டு. இன்றுள்ள தீவிரவாத இயக்கத்திலே பலம் வாய்ந்ததும் வல்லரசுகள் கண்ணில் விரல்விட்டு ஆட்டுவதும் அதுதான்

உலகம் ஐ.எஸ், அல் கய்தா என அமெரிக்க தயாரிப்பு தீவிரவாதங்களைத்தான் காணும் காரணம் விளம்பரம், ஹிஸ்புல்லாவிற்கு அப்படியான விளம்பரம் இல்லை எனினும் சிங்கம் சிங்கமே

கடந்த ஆண்டு விரைவில் இஸ்ரேல் மீது தாக்குதல் என சொல்லியிருந்தது

இப்பொழுது சவுதிக்கும் ஈரானுக்கும் மறைமுகம் யுத்தம் நடத்தும் நிலையில் இரானின் ஹிஸ்புல்லாவினை அழிக்க சவுதி தயாராகின்றது, உபயம் அமெரிக்கா

பிண்ணணி இசை, இயக்கம் இஸ்ரேல்

கடந்த மாதம் அமெரிக்கா லெபானிய அரசுக்கு நவீன விமானம் கொடுத்ததும், சவுதி தன் குடிமக்களை லெபனானில் இருந்து வெளியேற சொன்ன காட்சிகளும் நடந்தன, அதாவது யுத்ததிற்கு தயாராகும் காட்சிகள் இவை

இப்பொழுது யுத்தம் மூளவேண்டும், சந்தடி சாக்கில் எல்லோரும் ஹிஸ்புல்லாவினை அழித்து ஈரான் மேற்குபக்கம் வராமல் செய்யவேண்டும்

இந்த நகர்வில் நகர்கின்றார்கள்

ஜெருசலேம் பிரச்சினையினை இழுத்தால் பாலஸ்தீனம் பொங்கும், அதற்கு துணையாக‌ ஹிஸ்புல்லா வரும் சந்தடி சாக்கில் பெரும் யுத்தம் தொடுக்கலாம் எனும் வியூகம் இருகின்றது என்கின்றார்கள்

அவர்கள் எதிர்பார்த்தபடியே ஹமாஸ் தாக்குகின்றது, இஸ்ரேல் விமானங்கள் பதிலுக்கு குண்டு வீசுகின்றன‌

ஹிஸ்புல்லா இந்த வலையில் சிக்குமா என்பது அவர்களின் மாவீரன் நஸ்ருல்லா கையில் இருக்கின்றது

அவர் இன்னமும் வாய்திறக்கவில்லை

ஹிஸ்புல்லா இந்த வலையில் சிக்காது, அதனை பொறுத்தவரை ஜெருசலேம் எங்கு இருந்தால் என்ன? நாளை இஸ்ரேல் என்றொரு நாடே இருக்காது, பின் ஜெருசலேம் பாலஸ்தீனுக்குத்தான் சொந்தம் எனபது போல் அது சிந்திக்கின்றது

எப்படியோ ஹமாஸ் ராக்கெட் வீச்சும், பதிலுக்கு இஸ்ரேல் தாக்குதலும் அதற்கு எதிராக உலக கண்டனங்களும் குவிந்துகொண்டிருக்கின்றன‌

ஹிஸ்புல்லாவும் ஈரானும் சவுதி இருக்கும் வரை , அதற்கும் இஸ்ரேலுக்கும் கள்ள உறவு இருக்கும் வரை பாலஸ்தீனத்திற்கு விடிவு இல்லை என்ற ரீதியில் பேசிகொண்டிருக்கின்றன‌

இப்போதைக்கு ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இந்நொடியில் மோதல்

இது இனி எப்படி எல்லாம் வெடிக்குமோ என்பது விரைவில் தெரியலாம்

என்ன சொன்னாலும் ஈரானியர்களின் தைரியமும், ஹிஸ்புல்லாவின் சாகசமும் அப்பகுதியில் கொஞ்சம் ஆச்சரியமான விஷயங்கள்தான்,

இன்னும் என்னென்ன ஆச்சரியங்களை கொடுக்குமோ தெரியவில்லை

ஆனால் கொடுக்கலாம் போலத்தான் தெரிகின்றது.