டிரம்ப் டிவிட்டரில் ஒரு வரியில் உலகை கலக்கிவிட்டார்
டிரம்ப் டிவிட்டரில் ஒரு வரியில் உலகை கலக்கிவிட்டார்
ஆம் அமெரிக்காவில் ஒருவர் 11 வருடத்துக்கு முன்னார் காணாமல் போனார், இப்பொழுது அமெரிக்க அதிபரே அவர் அமெரிக்க உளவாளி, அவர் இருக்குமிடம் ஈரானுக்கு தெரியும் அவரை ஒப்படைத்தால் பல காட்சிகளை மாற்றுவோம் என்கின்றார்
ஈரானும் மெதுவாக தலையாட்டி “வா மகனே வா..” என்கின்றது
அந்த நபர் ஒரு வியாபாரி போல ஈரானுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு சென்றிருக்கின்றார், அங்கு ஏதோ உளவுபார்த்த வகையில் சிக்கியிருக்கின்றார், விசாரித்தால அவர் சி.ஐ,ஏ ஆள் என தெரிந்த ஈரான் உள்ளே போட்டது, அமெரிக்கா தன் நபர் காணாமல் போனார் என்பதோடு முன்பு நிறுத்தியிருந்தது
இன்னும் எத்தனை உளவாளிகள் ஈரானில் இருக்கின்றார்கள் என்பது டிரம்புக்கு தெரியாது மாறாக சி.ஐ.ஏவுக்கு தெரியும்
அவர்கள் இப்போதைக்கு ஒரே ஒரு உளவாளி பெயரை மட்டும் சொல்லியிருக்கின்றார்கள், மீதியினை தேவைபடும் போது மட்டும் சொல்வார்கள்
மொத்த தகவலையும் டிரம்பிடம் சொன்னால் அது உடனே டிவிட்டர் மூலம் உலகெல்லாம் சென்றுவிடாதா என்ன?