டிராபிக் ராமசாமி திரைப்படத்தில் குஷ்பு
தலைவி நடித்திருப்பதால் இந்த டிராபிக் ராமசாமி படத்தினை ஒருமுறையாவது பார்த்து சங்க கடமையினை நிறைவேற்ற வேண்டும்
ஆனால் அங்கிள் சைமனும் நடித்து தொலைத்திருப்பதால் கடும் ஆலோசனையில் சங்கம் இருக்கின்றது
பாற்கடலில் வந்த விஷம் போல அந்த இம்சையும் அமிர்தம் அருகில் வந்து நிற்கின்றது
எனினும் தலைவி வரும் காட்சியில் மட்டும் தியேட்டரில் உட்புகுந்து பார்த்துவிட்டு ஓடிவந்துவிட வேண்டும் என தீர்மானம் போட்டாயிற்று
தலைவி வரும் காட்சிகள் முடிந்ததும் தியேட்டர் காலியாகிவிடுவதாக நம்பதகுந்த செய்திகள் சொல்வதும் கவனிக்கதக்கது
தலைவி தலைகாட்டுவதால் அப்படம் முதலுக்கு மோசமில்லை குறிப்பாக காலா அளவிற்கு நஷ்டமில்லை என செய்திகள் சொல்கின்றன
அடுத்து தலைவி படம் முழுக்க நடிக்கும் வகையில் ஒரு படம் நிச்சயம் வரும், அது தசாவாதரம் கமல் போல தலைவி படம் முழுக்க வருவது போல் இருக்கும் என சங்கம் தீர்க்கமாக நம்புகின்றது