டெங்கு பெரும் சிக்கலாக உருவாகியுள்ளது
டெங்கு பெரும் சிக்கலாக உருவெடுத்தாயிற்று, தமிழக அரசு பூசி மெழுகிய காலமெல்லாம் போய், டெல்லியிலிருந்தே மருத்துவகுழு வந்தாயிற்று
தினமும் உயிர்களை காவுவாங்கிகொண்டே இருக்கின்றது டெங்கி.
எதிர்பாரா நெருக்கடி இது, அரசியல் பேசிகொண்டிருப்பதில் அர்த்தமில்லை. எல்லோரும் மிக பொறுப்புணர்வுடன் இருந்தாலன்றி டெங்குவினை விரட்ட முடியாது.
அரசு மருத்துவமனைகள் தீவிரமாக இயங்கட்டும். பொதுமக்களும் சுற்றுசுற சுகாதாரம் என டெங்கு தடுப்பில் மிக கவனமாக இருக்கட்டும்
காரணம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நேரம், மழைக்காலம் தொடங்கிவிட்டால் டெங்கு அசுரவேகத்தோடு எழும்பும்
எல்லோரும் முடிந்த அளவில் ஒத்துழைக்க வேண்டிய நேரமிது
இந்த மிக அவசர காலத்திலும் தனியார் மருத்துவமனைகள் டெங்கி என சொல்லி பெரும் வசூலில் ஈடுபடுவதாக செய்திகள் சொல்கின்றன
காய்ச்சல் வந்தால் டெங்கி சோதனை அவசியமே, ஆனால் அந்த அவசியத்தை ஆயுதமாக்கி தனியார் மருத்துவமனைகள் கொள்ளையடிக்காமல் இருக்க அரசு கடிவாளம் போட வேண்டிய நேரமிது.
ஒரு உருப்படியான காரியத்தையும் இதுவரை செய்யாத அரசு, இதிலாவது செய்யட்டும்
கொசுறு
திமுகவுடன் எனக்கு கசப்பு இல்லை : வைகோ
ஆமாம், கசப்பு இல்லை ஆனால் அடிக்க செருப்பு தயாராக உள்ளதாக திமுகவினர் சொல்லிகொள்கின்றார்கள்