டெண்டுல்கர் அழ சொல்லிவிட்டார் என ஒரே அழுகை

இந்த டெண்டுல்கர் என்பவர் ஆண்கள் அழலாம் என சொல்லிவிட்டாராம் அவனவன் இம்சை தாங்கவில்லை, டெண்டுல்கர் அழ சொல்லிவிட்டார் என ஒரே அழுகை

நாமும் டெண்டுல்கர் சொன்னதை கவனிக்கின்றோம், அன்னார் எப்பொழுது அழுதார் என்றால் சாதனை மேல் சாதனை செய்துவிட்டு , உலக கோப்பையினையும் வென்றுவிட்டு, 40 வயதில் ஓய்வு பெறும் பொழுது அழுதிருக்கின்றார்

இந்த அழுகை யாருக்கு வராது? சாதித்து விட்டு ஓய்வுபெறும் எல்லோருக்கும் வரும்

மாறாக 1990களில் 0 ரன்களில் அவுட்டாகும் பொழுதோ, வால்ஷ் இவர் மண்டையில் செல்லமாக தட்டி அனுப்பும்பொழுது அழுதாரா என்றால் இல்லை

கல்கத்தாவில் 1996 அரையிறுதியில் இலங்கையிடம் படுமோசமாக இந்தியா தோற்றுகொண்டிருந்த பொழுது டெண்டுல்கர் அழவில்லை மாறாக களத்தில் போராடிய காம்ப்ளி அழுதார்

தன் மேல் ஊழல் சர்ச்சை வந்தபொழுது கபில் அழுதார்

இதெல்லாம் உண்மையான கண்ணீர், அந்த கண்ணீரில் வலி இருந்தது, உண்மை இருந்தது

மாறாக டெண்டுல்கர் ரிட்டையர்டு ஆன நேரம் அழுதது மயான அழுகைக்கு சமம் அதற்குத்தான் இவ்வளவு அழுகை..

இந்திய கலாச்சார படி ஆண்கள் அழுவதை விரும்ப மாட்டார்கள், அதுவும் மகன் முன்னால் தந்தை அழகூடாது என்பார்கள்

காரணம் தந்தையே கலங்கி பார்த்தால் இனி நமக்கு ஆதாரமும் பாதுகாப்புமில்லை என குழந்தைகள் மனநிலை பாதிப்புக்குள்ளாகும் , அதைத்தான் தவிர்க்க சொன்னார்கள்

உண்மை இருப்பவர்கள் எளிதில் அழமாட்டார்கள், தாங்கமுடியா நேரத்தில் தனிமையில் அழுவார்கள் உதாரணம் காமராஜர்

பொய்யர்கள் அடிக்கடி அழுவார்கள், மிக பெரும் உதாரணம் திராவிட அரசியல்வாதிகளும் அவர்களின் தலைவர்களும்