தங்க சுரங்கமா?
“அந்த மாபெரும் சேனை திராவிட நாடு வேண்டி போர்தொடுக்க சென்றது
திராவிடன் வாழ கடும்போர், திராவிட விடுதலை வேண்டி நீண்டபோர் என கடும்தரிப்பில் அணிவகுத்தது
அதன் போர்முழக்கமும், ஆயுத ஒலியும் அந்த இயக்கம் திராவிட நாட்டை அடையும் என சொல்லிகொண்டே இருந்தது
ஆனால் வழியில் ஒரு தங்க சுரங்கதை கண்டபின் அவர்கள் முழக்கம் மாறி பாட ஆரம்பித்தார்கள்
போர் முழக்கம் என்பது பாடலாயிற்று, ஆயுதம் தாங்கிய கரங்கள் தாளம் வாசித்தன
பகைவரை மிதிக்க வந்த கால்களுக்கு சலங்கை பூட்டபட்டது
எங்கும் ஆனந்தம், எல்லாம் கொண்டாட்டம்
கவசத்தை களைந்து உடலுக்கு சந்தணம் பூசினார்கள், கத்தியினை கீழே வைத்துவிட்டு மதுகிண்ணம் ஏந்தினார்கள்
போர் பாசறை போகமண்டபமாயிற்று
கவனித்துகொண்டிருந்த அந்த வீரன் அந்த தளபதியிடம் கேட்டான்
தளபதியாரே இப்படி எல்லாம் ஆடிபாடினால் எங்கிருந்து எதிரிகளை அடித்துவிரட்டி நாட்டை அடைவீர்? நம் லட்சியம் என்னாவது?
தளபதி சொன்னான் இதோ இந்த தங்க சுரங்கத்தை பணமாக்கி அந்த நாட்டை விலை கொடுத்தே வாங்கிவிடலாம் எதற்கு வீணாக போர்?”
என்றோ ஒரு நாள் கண்ணதாசன் எழுதியது இன்றும் திமுகவுக்கு அப்படியே பொருந்துகின்றது
கண்ணனை நினைத்தவர்கள் சொன்னது பலிக்கும் என்பது இதுதான்
