தண்டனை மிக கடுமையாக இருத்தல் வேண்டும்

மதபண்டிகைகள் என்பது சமூகம் வேறுபாடுகளை கடந்து ஒன்றாக கொண்டாட ஒரு வாய்ப்பு

அது சகோதரத்துவத்தையும் வளப்பத்தையும் கொண்டு வரும், பல மத மக்கள் உள்ள இடங்களில் அவர்களின் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதும் அவர்களின் மகிழ்வில் பங்குபெறுவதும் ஒற்றுமையினையும் அமைதியினையும் வளர்க்கும் ஒரு வாய்ப்பு

விடுமுறைகள் என அரசுகள் அறிவிப்பது அதனால்தான், இல்லையென்றால் இந்த சமூகத்து மக்களுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்க அதிக நேரமாகாது

எல்லா மக்களும் எல்லா கொண்டாட்டத்திலும் கலந்து கொள்ளவேண்டும் ஒற்றுமையினை வளர்க்க வேண்டும் என்பதே அரசு அறிவிக்கும் விடுமுறைகளின் தத்துவம்

அதை கொண்டாடமாட்டேன் என அடம்பிடிக்கும் மதவெறியர்களை விடுங்கள், ஆனால் அரசு விடுமுறை அறிவித்தபின்பும் திறந்திருக்கும் தனியார் அலுவலகங்கள், இன்னும் சிறப்பு வகுப்பு என திறந்திருக்கும் கல்வி நிலையங்கள் மேல் கடும் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்

அரசின் நோக்கமும், விடுமுறையின் தத்துவமும் அதில் அடிபட்டு போகின்றன‌

அரசு உத்தரவினை பெரும்பாலும் பின்பற்றாதவை பிற மத நிறுவணங்களும் நிலையங்களுமாகும்

இவர்கள் மேல் அரசு அவமரியாதை என்ற பிரிவில் கடும் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்

இச்சமூக்கம் ஒற்றுமையாக கொண்டாடி சகோதரத்துவத்தை நிலை நிறுத்தும் வாய்ப்பான பண்டிகைகள் தினத்தை வேலைநாளாக மாற்றுவது தேசவிரோதமும் அரசின் அறிவிப்பினை மீறிய செயலுமாகும்

அதற்கான தண்டனை மிக கடுமையாக இருத்தல் வேண்டும்