தனித்திருப்பதே சரி
கொரோனா ஆராய்ச்சி முடிவுகள் இப்பொழுது இந்த கட்டத்தில்தான் இருக்கின்றன
இந்த கொரொனா வைரஸ் Covid 19 என விஞ்ஞான அடைமொழியில் சொல்லபட்டாலும் அதன் அமைப்பு நம் கிராமத்து காடுகளில் காணப்படும் ஒட்டுப்புல் போல் இருக்கும், அதாவது ஒட்டுபுல் நாயுருவி எல்லாம் நம் உடைகளில் கால் கைகளில் ஒட்டிகொள்ளும், எங்காவது உதிர்ந்தால் அங்கு வளரும்
கொரோனாவுக்கும் இப்படி சில ஒட்டும் புற்கள் போன்ற அமைப்பு கிரவுண் (Crown) போல் இருப்பதால் அது கொரோனா ஆயிற்று
கொரொனா என்பது சாதரண கிருமி, கைகளில் வெறும் சோப்பு நுரைக்கே அதன் பாதுகாப்பு கவசம் உடைந்து செத்துவிடும் ஆனால் கண் மூக்கு வாய் வழியாக சென்றால் அதன் பின் இருப்பதுதான் ஆட்டம்
அந்த கிரவுண் அமைப்பு அல்லது ஒட்டுப்புல்
தொண்டையில் அதனை வலுவாக கால் அல்லது கைபதிக்க உதவுகின்றது, அப்பொழுது உடலின் பாதுகாப்பு அமைப்புகள் போராடுகின்றன
(கைகளில் இருந்தால் சோப்பில் அழியும் கிருமி , தொண்டையில் இருக்கும்பொழுது சோப்பை கலக்கி குடித்தால் தீராதா என நாம் தமிழர், திராவிட கோஷ்டி போல் கேட்டால் நம்மிடம் பதில் இல்லை)
இது எல்லா விஷயத்திலும் இயல்பான ஒன்று, இன்னொரு வைரஸோ பாக்டீரியாவோ நுழைந்தால் உடல் இப்படி போராடி காக்கும், ஜலதோஷம் எல்லாம் இவ்வகையே
ஆனால் இந்த கொரோனா கொஞ்சம் தந்திரமான வைரஸ் இது பாதுகாப்பு அமைப்பு அணுக்களிலே புகுந்து தானும் அவர்களில் ஒருவன் என நம்ப வைத்து குழப்பத்தை ஏற்படுத்தும்
அதிக நோய் எதிர்ப்பு கொண்ட உடல் என்றால் போடா வெளியே என தள்ளிவிடுகின்றது அவர்கள் பிழைக்கின்றார்கள், பலகீனமான உடல் என்றால் மற்ற பாகங்களை காக்க அந்த பாதுகாப்பு அணுக்கள் போராடும் பொழுது கொரோனா கிருமி நிம்மோனியா போன்றவற்றை உருவாக்கி கொன்றுவிடுகின்றது
எய்ட்ஸ் கிருமியும் இப்படி எல்லாம் ஆடும் தந்திரமிக்கது, அதனால்தான் கொரோனா போல அதற்கும் மருந்தில்லை
இதனால் வரும் முன் காப்பது நல்லது, வந்தாலும் டெங்கி போல் போராடினால் மீண்டுவிடலாம், இதன் கொல்லும் திறனே 3% தான்
அதாவது 100 பேரை தாக்கினால் 97 பேர் பிழைத்துவிடுவார்கள்
ஆனால் ஒரே அச்சம் இதன் பரவும் வேகம், அதை தடுக்க தனித்திருப்பதே சரி, காரணம் இது தனித்து வாழும் வைரஸ் அல்ல, ஒட்டுண்ணி அதாவது மனிதன் பரப்பினால் பரவும் இல்லையேல் கொஞ்ச மணி நேரத்தில் அல்லது ஒரு சில நாளில் செத்துவிடும்
இதனால்தான் தனித்திருந்து அதை வெல்ல சொல்கின்றார்கள், வெல்வோம்