தனித்திருப்போம், விழித்திருப்போம்!

கோரோனா நிலவரத்தை பார்க்கும் முன் சில முக்கிய உலகளாவிய கொரோனா செய்திகளை பார்க்கலாம்

இந்த கொரோனா பல வகை வடிவங்களை எடுக்கின்றது, 14 நாள் தனிமைபடுத்தபட்டு அறிகுறிகள் இல்லையென்றால் கொரோனா இல்லை என்பதெல்லாம் முழு முடிவு அல்ல, அது 21 நாளுக்கு மேலும் அமைதியாக இருந்துவிட்டு சட்டென வேலையினை காட்டுகின்றது

ஒரு அறிகுறியும் இன்றி ஒரே நாளில் சட்டென அது உக்கிரமாவதும், வந்தவர்களுக்கே திரும்ப வருவதுமாக அது உலகெல்லாம் மருத்துவர்களை குழப்புகின்றது

சீனாவில் அது இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிவிட்டது கொரோனா, மேலை நாட்டில் ஆளுக்கொரு அறிகுறியாக காட்டி மிரட்டும் கொரோனா, இப்பொழுதெல்லாம் தன்னை மேம்படுத்தி இருதயம் வரை தாக்க தொடங்கிற்று

இந்நிலையில் கொரோனா கிருமியினை ஆய்வு செய்யும் குழு ஆறுதலான செய்தியினை சொல்லியிருக்கின்றது அது கொரோனாவினை ஒழிப்பது பற்றியது

எல்லா பாதுகாப்பிலும் ஒரு ஓட்டை இருக்கும் அல்லவா? அது இயற்கை

யானைக்கு துதிக்கை பலம், நாகம் பல் இல்லாவிடால் டம்மி, சிங்கம் முன்னங்கால் இல்லாவிட்டால் சும்மா அதில் அடிபட்டால் முடங்கும், என்னதான் மனிதன் என்றாலும் நெற்றிபொட்டில் அடித்தால் காலி

மகாபாரதம் இதை தெளிவாக சொல்லும் , இந்திய புராணங்கள் எல்லாம் தெளிவாக சொல்லும்

முழு பலம் என எதுவுமில்லை, எல்லா பலத்திலும் ஒரு பலவீனம் இறைவனால் அனுமதிக்கபட்டிருக்கும் அதை தெரிந்து அடித்தால் எந்த பலமிக்க எதிரியும் காலி

அதைத்தான் கொரோனாவிலும் சொல்கின்றார்கள் , அப்படி கொரொனாவின் பலவீனமான பக்கத்தை கண்டறிந்துவிட்டார்கள், அதனை குறிவைக்கும் பொழுது கொரோனா சாகின்றது

துரியனின் பலவீனம் தொடையில் இருந்தது போல, பீஷ்மருக்கும் , துரோணருக்கும் பலவீனம் இருந்தது போல‌ கொரானாவின் பலவீனதை கண்டறிந்தாயிற்று,

இனி ஆய்வுகள் மேம்படலாம்

இந்நிலையில் பில்கேட்ஸின் விஞ்ஞான கோஷ்டி இரண்டாம் தடுப்பூசியினை இன்று சோதிக்கின்றது இப்படி இன்னும் சிலமுறை சோதித்து முடிவுக்கு வருவார்கள் சில வாரம் ஆகும்

ஆக கொரோனாவுக்கு எதிரான போர் மூன்று வகைகளில் நடக்கின்றது, வந்தோருக்கு சிகிச்சை என மருத்துவ குழு

வருமுன் காப்போம் என மக்களை கண்காணிக்கும் காவலர் குழு

எப்படியும் மருந்து கண்டிபிடித்தாகவேண்டும் எனும் விஞ்ஞானிகள் குழு

இவர்கள் மூவரையும் வழிநடத்தும் அரசுகள் மிக மிக விழிப்பாய் காரியங்களை செய்கின்றன‌

விரைவில் நற்செய்தி வரும் என எதிர்பார்ப்போம், இப்பொழுதுதான் கொரோனாவினை வீழ்த்தும் முறையினை கண்டறிந்திருக்கின்றார்கள் இனி அதை பரீசிலித்தால் வெற்றி உடனே கிடைத்தாலும் கிடைக்கலாம்

அதுவரை தனித்திருப்போம், விழித்திருப்போம்