தனியார் கிறிஸ்தவ ஆங்கில பள்ளியில்தான் படிக்க வைத்தார் என பகிரங்கமாக சொல்கின்றார் ஸ்டாலின்

ஜோசப் பனிமய பங்குராஜ் என்றொரு கல்விதந்தை இருந்தார், அப்படி சொன்னால் புரியாது ஜேபிஆர் என்றால் புரியும்

சத்யபாமா பல்கலைகழக நிறுவணர் அவர்தான். அதிதீவிர எம்ஜி.ராம்சந்தர் விசுவாசி, ஏதோ ஒரு இடத்தில் ஆதிசங்கரர் பாட தங்க மழை பொழிந்ததாம் அப்படி ராம்சந்தர் புண்ணியத்தில் பெரும் ஆளாக உருவானவர் அந்த ஜே.பி.ஆர்

அந்த ஜேபிஆர் ஒரு இடத்தில் இப்படி பேசினார்

“எனக்கு தமிழ்பற்று கிடையாதுப்பா, ஏன்னா எனக்க்கு தமிழ் இலக்கியம் தெரியாது. ஏதோ பேச தெரியும் அவ்வளவுதான். எனக்கு கொள்கை கோட்பாடு என எதுவும் கிடையாதுப்பா. என் தலைவன் எம்ஜிஆர் அவ்வளவுதான்

ஆனால் தமிழுக்காக வாழும் கருணாநிதி மகள் கனிமொழி என் மகள் கூட சர்ச் பார்க் இங்கிலீஷ் ஸ்கூல்ல படிக்கிறாப்பா, ஏன் தமிழ் ஸ்கூல்க்கு அவர் மகள அவர் அனுப்பல.. இனி நீயே புரிஞ்சிக்க..”

அந்த காட்சியும் ஜேபிஆரின் பேச்சும் பலருக்கு மறந்த நிலையில் அதை மறுபடி நினைவுபடுத்திவிட்டார் திமுக தலைவர் முக ஸ்டாலின்

அன்னார் அவர் படித்த M.C.C எனும் தனியார் கிறிஸ்தவ பள்ளியில் தன் வகுப்பு தோழர்களை எல்லாம் சந்தித்தாராம், அதை படமாக போட்டு மகிழ்கின்றார்

உபிக்களும் தலைவன்டா என ஆனந்த கண்ணீர் வடிக்கின்றன‌

ஆக தமிழின தலைவர், முத்தமிழ் அறிஞர், தமிழுக்கு தலைகொடுத்த கருணாநிதியின் பிள்ளைகள் அரசு பள்ளியிலும் படிக்கவில்லை தமிழ்வழி கல்வியிலும் படிக்கவில்லை

இதை ஜேபிஆர் கனிமொழி மூலம் சொன்னார், இப்போதைய தலமை தானே வலிய சொல்கின்றது

ஆம், எங்கள் அப்பா தமிழின தலைவராக , தமிழக முதல் அமைச்சராக இருந்தாலும் எங்களை எல்லாம் தனியார் கிறிஸ்தவ ஆங்கில பள்ளியில்தான் படிக்க வைத்தார் என பகிரங்கமாக சொல்கின்றார் ஸ்டாலின்