தன் அணுஆயுத உற்பத்தி நிலையத்தை தகர்க்க முன்வந்திருக்கின்றது வடகொரியா
உலகில் எல்லோரையும் வரவழைத்து அவர்கள் கண் முன்னால் தன் அணுஆயுத உற்பத்தி நிலையத்தை தகர்க்க முன்வந்திருக்கின்றது வடகொரியா
எந்த நாடும் இப்படி பணிந்ததில்லை
மீதமிருக்கும் அணுகுண்டுகள், செறிவூட்டபட்ட யூரேனியத்தை என்ன செய்ய போகின்றார் என்ற தகவல் இல்லை எனினும் வடகொரியா அணுஆயுதத்தை விட்டுவிட்டது புரிகின்றது
அப்படி என்ன சொல்லி பயமுறுத்தினார்கள் என்பதுதான் இன்று உலகத்தார் தலையினை பிய்த்துகொண்டிருக்கும் கேள்வி
அணுகுண்டை விட மகா ஆபத்தான ஏதோ ஒரு தொழில்நுட்பத்தை காட்டி மிரட்டியிருக்கின்றார்கள் என்பது மட்டும் புரிகின்றது
அது என்ன ஆயுதம் என்பதுதான் தெரியவில்லை, ஆனால் அப்படி ஒரு தொழில்நுட்பம் இல்லாமல் வடகொரியா இப்படி அஞ்சி இறங்கி இருக்காது என்கின்றார்கள்
அது என்ன என்பது எப்பொழுது தெரியும் தெரியுமா?
இதை விட அதிபயங்கர சக்தி ஒன்று கிடைக்கும்பொழுதுதான் இந்த மர்மத்தையே பெண்டகன் வெளியிடும்.