தமிழகத்தின் ஒவ்வொரு கத்தோலிக்க மறைமாவட்டமும் ஒரு சாதிபிடியில் சிக்கியுள்ளது
தமிழகத்தின் ஒவ்வொரு கத்தோலிக்க மறைமாவட்டமும் ஒரு சாதிபிடியில் சிக்கியுள்ளது
மதுரைக்கு தெற்குபக்கம் உடையார் பாதிரி வரமுடியாது, மறவர் பாதிரி வரமுடியாது
மதுரைக்கு வடக்கு பக்கம் பெர்னாட்டஸ் பாதிரி,நாடார் பாதிரி செல்ல முடியாது
இதில் தலித் கத்தோலிக்க பாதிரி என அதிகமில்லை அவர்கள் நிலை மகா மோசம்..
வேளாங்கண்ணி ஆலயத்தின் பாதிரி லாபி இன்றுவரை வேளாங்கண்ணி மாதாவுக்கே தெரியவில்லை பாவம்..
அட தூத்துகுடி மறைமாவட்டத்திற்கே நாடார் பாதிரி பிஷப் ஆகமுடியாமல் அவர்கள் இரண்டாய் பிரிப்பதில் பாமக ராமதாஸ் போல தீவிர முயற்சியில் இருக்கின்றார்கள்
இவர்கள் நிலை இப்படி என்றால் பிரிவினை அழிச்சாட்டிய கோஷ்டியின் ஒவ்வொரு சபையும் ஒவ்வொரு சாதிய குறியீடாகிவிட்டன
அதற்குள்ளாவது சரியா என்றால் அதுவுமில்லை தெருச்சண்டை எல்லாம் இருக்கும் போலிருக்கின்றது
சாதிக்கொரு சபை, சபைக்குள் உள் அரசியல் உச்சமாக சாதிவாரியாக கல்லறை தோட்டம்
இவற்றை எல்லாம் வைத்துகொண்டுதான் மற்ற மதத்தை அவர்கள் சாடுகின்றார்களாம்
“சகோதரனே உன் கண்ணில் உள்ள விட்டத்தை எடு, அப்பொழுதுதான் உன் அயலான் கண்ணில் உள்ள உத்திரத்தை காண உனக்கு நன்றாய் கண் தெரியும்” என்றார் இயேசுநாதர்