தமிழகத்தின் முதல் நாவலாசிரியர்

18ம் நூற்றாண்டுவரை தமிழில் உரைநடை எழுத்துவடிவம் கிடையாது. ஓலைசுவடியில் பெரும் பொருளை சுருக்கி எழுதும் வசதி,மனப்பாடம் செய்ய எளிது என செய்யுள் வடிவிலே எழுத்து தமிழ் இருந்தது

ஒரு தமிழர் காகிதமும் இன்னபிற வசதிகளும் வந்தபின் முதன் முதலில் உரைநடையில் எழுதும் வழக்கத்தை தொடங்கினார், இன்று காணும் எழுத்தின் வடிவம் அவர் கொடுத்தது

அவரின் “பிரதாப முதலியார் சரித்திரம்” என்பதுதான் தமிழின் முதல் நாவல், அதுவரை தமிழுக்கு நாவல் கிடையாது, உரைநடை கிடையாது.

அவர் பெயர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை,

தமிழகத்தின் முதல் நாவலாசிரியர்

மாயூரம் என்பது இந்நாளைய மயிலாடுதுறை, அவர் 18ம் நூற்றாண்டிலே கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்திருந்தார், ஆங்கிலம் அன்றே கற்றிருந்தார்

மனிதருக்கு வெள்ளையன் மொழிபெயர்ப்பு வேலையினை கொடுத்திருந்தான், ஒழுங்காக ஆங்கில நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்த்துகொண்டிருந்தார்.

அது கிறிஸ்தவம் பரவிய புதிது என்பதால் இங்கு பைபிளை ஆறுமுக நாவலர் மூலம் மொழிபெயர்த்தார்களே தவிர பாடல்கள் அன்று இல்லை

ஆறுமுக நாவலரின் இன்னொருபக்கம் அன்று வெளிபட்டது, அவரின் இசைஞானமும் அற்புதமான கவித்துவமும் அழியா பாடல்களாயின‌

இன்று பிரிவினை கோஷ்டி, அல்லேலூயா கோஷ்டி எல்லாம் பாடும் பழைய பாடல்கள் எல்லாம் அவர் கொடுத்தது, திருவருள்மாலை, திருவருள் அந்தாதி, தேவமாதா அந்தாதி, தேவ தோத்திர மாலை, பெரியநாயகி அம்மைப் பதிகம் என பலவிஷயங்களை எழுதினார்

நல்ல கிறிஸ்தவனாக இருந்துகொண்டு இன்னொரு பக்கம் சமகால தமிழ் அறிஞர்களான மீனாட்சிசுந்தரம் பிள்ளை, வடலூர் ராமலிங்க அடிகளார், திருவாவடுதுறை மடத்தின் மகாசன்னிதானம் சுப்ரமணிய தேசிகர் போன்றோருடன் சேர்ந்து தமிழ்வளர்த்தார்

15க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார், புதியபாணி கவிதைகளுக்கு 18ம் நூற்றாண்டிலே வித்திட்டார், இன்று காணும் மறுமலர்ச்சி அவர் தொடங்கியது

இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளி அவரால்தான் மாயூரத்தில் தொடங்கபட்டது என்கின்றன செய்திகள், பாளையங்கோட்டை பெண் கல்வி நிறுவணங்களை விட அவரின் பெண் கல்வி நிலையமே காலத்தால் முந்தையது

அவர் மொழிபெயர்த்த நீதிமன்ற தீர்ப்பும் சட்டங்களுமே தமிழில் வெளிவந்த முதல் சட்டகுறிப்பு

மிகபெரும் எழுத்தாளர், இசைஞானி, கவிஞர், மொழிபெயர்ப்பாளர், தமிழறிஞர், எழுத்துக்கு தலைகீழ் திருப்பம் கொடுத்தவர், முற்போக்காளர், பெண் கல்வி கொடுத்த சீர்திருத்தவாதி என அவருக்கு பல முகங்களும் பெருமைகளும் உண்டு

எல்லாவற்றையும் விட முக்கியமானது அவரின் இரக்கமனம், ஒருமுறை பஞ்சம் வந்தபொழுது தன் சொத்துக்களை விற்று ஏழைகள் பசியினை போக்கினார், அதில் தன்னிகரற்று நின்றார்

நல்ல தமிழறிஞராக தமிழனாக தமிழ்வளர்த்த அந்த வேதநாயகம் பிள்ளைக்கு இன்று பிறந்த நாள்

அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள், அவரின் சேவைகள் தமிழ் உலகம் மறக்க கூடாதது. கிறிஸ்தவ தமிழுலகம் எக்காலமும் நினைவு கூறதக்கது

மனிதர் மிகசிறந்த நகைச்சுவையாளரும் கூட, அந்த பிரதாப முதலியார் சரித்திரத்தில் இப்படி ஒரு காட்சி உண்டு, அதுவும் 18ம் நூற்றாண்டிலேயே…

“அந்த போரில் நான் எவ்வளவு சாதித்தேன் தெரியுமா? எதிரிபடையினரின் கால்களை எல்லாம் வெட்டினேன்..

தலையினை வெட்டாமல் ஏன் காலை வெட்டினாய்?

நான் வெட்டும் முன் தலையினை எவனோ வெட்டிவிட்டு சென்றிருந்தான், இல்லையென்றால் அதைத்தான் வெட்டியிருப்பேன்”