தமிழகத்தில் இனி மழை வந்தால் என்ன புயல் வந்தால் என்ன?

டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதி உள்ளாட்சி தேர்தல் என அறிவித்துவிட்டார்கள், தமிழகத்தில் இனி மழை வந்தால் என்ன புயல் வந்தால் என்ன?

ஆளாளுக்கு கட்சிகளும், தனி நபர்களும் எப்படியெல்லாம் மக்களை மீட்க போகின்றார்கள் என்பதை இனி காணலாம்,

தலைக்கு மேல் வைத்து தாங்குவார்கள், புயல் காற்றை விட வேகமாக சண்டமாருதம் போல் வந்து காப்பார்கள்

எனினும் திமுக சில தினங்களுக்கு முன்பு இப்போதைக்கு தேர்தல் நடத்த கூடாது நீதிமன்றம் சென்றது, தீர்ப்பு ஒருவேளை தேர்தலை பாதித்தாலும் பாதிக்கலாம்