தமிழகத்தில் இரு அயோக்கியர்களை நினைத்து பார்க்கின்றேன்.

Image may contain: 3 people, text

தமிழகத்தில் இரு அயோக்கியர்களை நினைத்து பார்க்கின்றேன், அவர்கள் நிச்சயம் தமிழராகவோ தமிழ் நாகரீகமும் கலாச்சரமும் அறிந்தவராக இருக்க முடியாது

முதல் நபர் இந்த இயக்குநர் செல்வராகவன், சோழர்களை அவ்வளவு கேவலமாக சித்தரித்து அவர் இயக்கியிருந்த அந்த “ஆயிரத்தில் ஒருவன்” தமிழ் சினிமாவின் சாபக்கேடு.

ஒரு இனம் எவ்வளவு பெரும் ஞானத்திலும் நாகரீகத்திலும் பெருவாழ்வு வாழ்ந்திருந்தால் தஞ்சை தரணி அவ்வளவு அடையாளங்களை கொடுத்திருக்கும்? அவர்களை காட்டுமிராண்டிகளாகவும் மனித உடலை தின்னும் காட்டுவாசிகளாக காட்டியதெல்லாம் மன வக்கிரம், உக்கிரமான வக்கிரம்

இன்னொரு இனம் என்றால் அந்த படத்தை கொளுத்தி எரித்திருக்கும், அனால் ஈரோட்டு ராம்சாமியினையே விட்டு வைத்த தமிழகம் செல்வராவ‌கனை விட்டதில் ஆச்சரியமில்லை

கொஞ்சமும் அறிவின்றி வரலாறு தெரியாமல் எடுக்கபட்ட படம் அது அல்லது உண்மையான வரலாற்றை மறைத்து எடுக்கபட்ட வஞ்சக படம். எப்படியோ செல்வராகவன் குறித்து வைத்து அடிக்க வேண்டிய நபர்

இன்னொருவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி

அவரின் “உளியின் ஓசை” எனும் நாவலை (அது நாவல்?) விடுங்கள், அது ஒரு காமெடி கதை

ஆனால் ராஜராஜ சோழனின் ஆயிரமாண்டு விழாவில் ஒரு முதல்வராக தமிழரின் முதல்வராக விழா எடுத்து அங்கு கலந்து கொண்டு என்னவெல்லாமோ செய்த கருணாநிதி, கடைசி வரை தமிழனின் கலை தமிழனின் ஆலயம் என சொல்லிகொண்டே இருந்தாரே தவிர, ஒரு இடத்திலும் ராஜராஜனின் சிவபக்தி பற்றி சொல்லவே இல்லை

நிச்சயம் ராஜராஜன் எனும் ஒரு அரசனால் அந்த ஆலயம் அமைந்திருக்காது, அந்த ஆலயம் மொத்த மக்களின் கனவு, எல்லா மக்களும் அதற்கு ஒத்துழைத்தார்கள், ஏன் அன்றைய சேர பாண்டி மன்னர்களே பெரும் உதவிகளை செய்திருக்கின்றார்கள்

கருணாநிதி என்பவர் பெரும் உயரத்தில் இருந்தவர், அவர் ஆயிரம் புத்தகங்களை புரட்டும் இலக்கியவாதி எழுத்தாளர்..

அவருக்கு இயல்பாக சோழ நாட்டு அறிவு இருந்தது, அவர் வாசித்த புத்தகங்கள் அவருக்கு சோழனை பற்றி கோவிலை பற்றி தரவுகளை கொடுத்தன‌

எல்லாவற்றுக்கும் மேல் அவர் முதல்வர், கல்வெட்டு அறிக்கை முதல் தொல்லியல் அறிக்கை வரை அவர் பட்டனை தட்டினால் அவன் முன்னால் வந்து விழுந்திருக்கும், எவ்வளவோ கிடைத்திருக்கும்

கிடைத்ததா என்றால் கிடைத்தது, ஆனால் அது சோழர்களின் சிவபக்தி, இந்துமத அபிமானம் என எல்லாவுமாக இருந்தது

இதனால் மனசாட்சியினை கொன்று அவற்றை எல்லாம் மறைத்தார் கருணாநிதி

மனசாட்சியினை கொன்று புதைத்து இந்து அடையாளம் என்பதை “தமிழர் கலை” என மாற்றிகொண்டு சதய விழாவினை நடத்தினார்

அதையும் நடத்திவிட்டு, தமிழன் இந்துவாக இருந்தான் எனும் பெரும் உண்மையினை தஞ்சை கோவிலில் கால்வைத்த பின்னும் சொல்லாமல் “தமிழனுக்கு மதம் இல்லை” என அவர் சொன்னதெல்லாம் எவ்வளவு பெரும் வஞ்சக பொய்கள்?

தமிழனுக்கு மதம் இல்லாமலா பக்தி வந்தது? பக்தி இல்லாமலா அவ்வளவு பெரும் ஆலயம் வந்தது?

இதை பற்றி ஒருவார்த்தையும் சொல்லாத கருணாநிதி செய்தது எவ்வளவு பெரும் பாவம்? மன்னிக்கவே முடியாத பாவம் அல்லவா?

அதன் பின் கருணாநிதி எழும்பவே இல்லை, பெரும் சிக்கல்களை சந்தித்தார்

ஒரு விஷயம் இதில் ஆச்சரியமானது, எந்த தஞ்சை கோவிலை மறைத்தால் தமிழன் இந்து என்பதை மறைக்கமுடியுமோ அதை அழகாக செய்தார் கருணாநிதி

ஈழத்தவரையும் இணைத்து ராஜராஜன் கட்டிய அந்த ஆலயத்தின் இந்து அடையாளத்தை மறைத்தார் கருணாநிதி

ஆனால் ராஜராஜசோழனின் இன்னொரு நாடான இருந்த ஈழத்தில் இருந்தே அவருக்கு அந்திம சோதனை வந்தது, அதுவும் புலிக்கொடி வடிவிலே வந்தது

இன்றல்ல, நாளை அல்ல, எக்காலமும் ஈழசிக்கல் கருணாநிதி வாழ்வில் பெரும் கறையே அதை மறைக்க யாராலும் முடியாது

ராஜராஜசோழனின் ஆவி அவரை அப்படி பழிவாங்கி போட்டது அதுவும் புலிக்கொடி கொண்டே கிழித்தது

2010ல் ஆலயத்தில் கால்வைத்தும் சோழரின் மதபற்றை இந்து அபிமானத்தை, சிவ வழிபாட்டை தன் பிடிவாதத்தால் சொல்ல மறுத்த கருணாநிதி அதன் பின் தீரா சிக்கலில் சிக்கினார், அதன் பின் எழவே இல்லை

சிவ சொத்தினை அபகரித்தல் மட்டுமல்ல, சிவனின் புகழை மறைத்தாலும் குல நாசம், அதுவும் பெரும் இடத்தில் இருப்பவர்கள் மறைத்தால் நாசமோ நாசம்

அந்த குலம் எப்படி வாழும்? ஒரு காலமும் சிறக்காது

தஞ்சை கோவில் புகழை , தமிழனின் இந்து வழியினை மறைத்த பாவத்தின் பலனை கருணாநிதி தன் அந்திம காலங்களில் உணர்ந்திருக்கலாம், கழுவாயாக “ராமானுஜர்” கதையினை கையில் எடுத்திருக்கலாம்

“அய்யா தொல்காப்பியமும், திருகுறளும், சிலப்பதிகாரமும் உன்னால் பட்ட பாடு போதாதா? ராமானுஜர் கதையினையும் திரிக்க வேண்டுமா?

பெரு உடையார் கோவில் கதையினை “உளியின் ஓசை” என திரித்தது போல ராமானுஜர் கதையினையும் திரித்தால் கடல் தாங்குமா? நிலம் தாங்குமா? வைத்துவிடய்யா..” என மன்றாடிய சக்தி அவரை அத்தோடு அமர்த்திவிட்டது

ஆக இந்த செல்வராகவன், கருணாநிதி என இருவர் சோழரை திரித்து அவர்கள் சிவபக்தியினை பழித்து எழமுடியா பாதாளத்தில் வீழ்ந்தது போல் விழ இருப்பவர் மணிரத்னம்

ஆம் அவர் பொன்னியின் செல்வன் இப்படித்தான் தயாராகின்றது, சோழனுக்கு திருநீறு இல்லை, லிங்கம் இல்லை, சோழர் இந்துக்கள் எனும் அடையாளம் ஒரு இடத்திலும் இல்லை

ஆக செல்வராகவின் படமும், கருணாநிதியின் “உளியின் ஓசை” படமும் எந்த குப்பைதொட்டிக்கு போனதோ அதே குப்பை தொட்டியினை மணிசாரின் “பொன்னியின் செல்வன்” படத்துக்கும் தயாராக வைத்திருக்கின்றது தமிழகம்

அநேகமாக மணிசாரும் அதில் விழுவார் போலிருக்கின்றது, இல்லாவிட்டால் சிக்கல் இல்லை, பிடித்து உள்ளே தள்ளி விட்டுவிடலாம்

Image may contain: 3 people
No photo description available.