தமிழகத்தில் பாஜகவின் பி டீமாக செயல்படுவது பெரியாரிய இயக்கங்கள்
திமுகமேல் எப்பொழுதுமே இந்த கொளத்தூர் மணி உட்பட பல பெரியாரிஸ்டுகளுக்கு கடும் அதிருப்தி உண்டு
திமுகவின் சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம் இலங்கை இறுதிபோரில் கருணாநிதி காட்டிய அமைதி எல்லாம் அவர்களுக்கு ஆறா தீக்காயங்கள்
அப்படிபட்ட கொளத்தூர்மணி கோஷ்டி திமுகவினை சாய்க்க நேரம் பார்த்து கொண்டிருந்தது , இப்பொழுது முதல் வாய்ப்பு வந்தவுடன் விசிலடித்து களமிறங்கிவிட்டன
ஆம் அன்று ஈரோட்டு ராம்சாமி ராமலீலா என ராமர் உருவத்தை தீயிட்டு கொளுத்தியது நிஜம், அவமானபடுத்தியதும் நிஜம்
அதற்கு முன்பே பிள்ளையார் சிலையினை செருப்பால் அடித்த சர்ச்சை எல்லாம் அவர்மேல் உண்டு
சீதையும், பாஞ்சாலியும் பற்றி அவரின் கருத்துக்கள் அவரின் பத்த்ரிகையிலே உண்டு, கைபுண்ணுக்கு ஏன் கண்ணாடி
அப்படிபட்ட ராம்சாமி அன்று ராமர்படம் கொளுத்திய சம்பவத்தை கருணாநிதி மிக சிரமபட்டு மறைத்தார், அத்துடம் ராம்சந்திரன் தனிகட்சி கண்டு கருணாநிதி அதளபாதாளத்தில் எறியபட்டதால் தமிழகமும் மறந்தது
எனினும் அந்த சம்பவத்தை குழிதோண்டி புதைத்தார் கருணாநிதி, அது வெளிவந்தால் ராம்சாமி இமேஜூம், அவர் ராமனை எரிக்கும்பொழுது விட்டுகொண்டிருந்த தன் பகுத்தறிவும் தமிழருக்கு தெரிந்துவிடும் என்பதில் கவனமாயிருந்தார்
இப்பொழுது ரஜினி அதை பாதி தோண்டிவிட்டு ஓடிவிட்டார், அவர்மேல் வழக்கு புகார் என மீதியினை தோண்ட சொல்கின்றன இந்த பெரியார் கோஷ்ட்டிகள்
விஷயம் நடந்து உறுதிபடுத்தபட்டது என்பதால் நிச்சயம் எளிதில் நிரூபணமாகும்
அது திமுகவுக்கு சரிவினை கொடுக்கும், அது தேர்தலில் எதிரொலிக்கும்
பெரியார் இயக்கங்கள் திண்ணையில் தூங்கிகொண்டிருக்கின்றன, தங்களுடன் வந்து குட்டிசுவரில் அமர திமுகவினை அழைக்கின்றன,, இருந்து பாருங்கள் ஈரொட்டு ராம்சாமிக்கும் திமுகவுக்கும் பெரும் அவமானம் கொடுக்க போகும் விஷயம் இவை
ஆக தமிழகத்தில் பாஜகவின் பி டீமாக செயல்படுவது பெரியாரிய இயக்கங்கள் என்பதுதான் இப்போதைய காட்சிகள்