தமிழகத்தில் பிச்சைதான் எடுப்பேன் என ரஷ்ய பயணி அடம்

நான் தமிழ்தாயின் சொந்தபிள்ளை, ரஜினியும் கமலும் தமிழ்த்தாய் வளர்ப்பு பிள்ளைகள், அவர்கள் என் நண்பர்கள், அவர்கள் என் சாப்பாட்டில் பங்கு கேட்கலாம் ஆனால் என் படுக்கையில் இடம் கேட்க கூடாது : பாரதிராஜா

அதாவது ரஜினி கமல் அரசியல் வருகை சர்ச்சைகளுக்கு இப்படி பதிலளித்திருக்கின்றார். மிக விவரமாக வார்த்தை ஜாலமாக சொல்லிவிட்டாராம்.

அந்த கேள்வி கேட்டவராவது, சரி அய்யா இந்த தமிழ் பிள்ளைகள் படுக்கையில் பங்கு கேட்டால் தவறு, ஆனால் உங்களை தலையில் வைத்து கொண்டாடிய உங்கள் அண்ணன் ராமசந்திரன் உங்கள் படுக்கையில் 11 வருடம் படுத்துவிட்டு, ஜெயாவினை இன்னொரு 16 வருடம் அனுமதித்தாரே அப்பொழுது எங்கு சென்றீர்கள் என கேட்டிருக்கலாம். ஆனால் கேட்கவில்லை

மிஸ்டர் பாரதிராஜா ராமசந்திரனும், ஜெயாவும் தமிழ்த்தாயின் வளர்ப்பு பிள்ளைகள் இல்லையா?

ராமசந்திரனுக்கு மட்டும் தன் படுக்கையினை பாரதிராஜா கொடுப்பார் போல..


ரஷ்யா போகமாட்டேன், தமிழகத்தில் பிச்சைதான் எடுப்பேன் என ரஷ்ய பயணி அடம்

இப்படி சொன்னால் போகமாட்டார், மாறாக என்ன சொல்ல வேண்டும்?

“அப்பனே, பிச்சை எடுக்கும் நீ அவர்களோடுதான் தங்கவேண்டும், இங்கு அவர்களை கடத்தி கிட்னி, லிவர் எல்லாம் திருடுவது சகஜம்

அதுவும் வெளிநாட்டு கிட்னிக்கு கிராக்கி அதிகம், அதுவும் பெரும் பிரபலங்கள் எல்லாம் கிட்னிக்கும் லிவருக்கும் காத்துகொண்டே இருக்கின்றன” என சொன்னால் போதாதா?