தமிழகம் இந்த மராட்டியர்களை போல் சிந்திக்கவில்லை என்பதுதான் ஆறுதல்
1818ம் ஆண்டு தங்கள் ராஜ்யத்தை விஸ்தரித்த ஆங்கிலேயர்கள் தமிழகம், வங்கம் என பிடித்துவிட்டு மராத்தியர் சரிந்த காலங்களில் அங்கும் கால்பதித்தனர்
எங்கு சென்றாலும் சொந்த படையோடு வென்றவன் அல்ல ஆங்கிலேயன், இங்குள்ள மக்களையும் படையில் சேர்த்தே சண்டையிடுவான்
தமிழகம், வங்கம், பீகார் எல்லாம் இதே வேலைதான், அப்படியே மகராஷ்டிரம் பக்கம் கொஞ்சம் உள்ளூர் மக்களை சேர்த்து மராட்டிய ஆளும் வர்க்கத்தை வென்றான்
அங்கு ஒரு நினைவு தூணும் உண்டு, கோரேகான் என்பது அந்த இடம்
இது கர்நாடக போர், பிளாசி போர், பஞ்சாப் போர் போன்று நடந்ததது, அதுதான் வரலாறு
ஆனால் ஆங்கிலேய படையில் தலித் மக்கள் அதிகம் இருந்ததாலும் அவர்கள் உயர்சாதியினை வென்றதாலும் இந்த போர் திசைமாறிற்று
எப்படி மாறிற்று? தலித் புரட்சி, தலித்துகள் மேல்சாதியினை ஓட விரட்டிய புரட்சி நாள் என மாறிற்று
அடிக்க சொன்னது யார் ? தலித்துகள் யாருக்காக சண்டையிட்டார்கள் , போரில் வென்று ஆட்சி செலுத்தியது யார் என்பதெல்லாம் மறந்தாயிற்று
தலித்தோ, மராட்டியரோ இருவருமே வெள்ளையருக்கு அடிமை என்பதும் சுத்தமாய் மறந்தாயிற்று மாறாக தலித்துகள் வெற்றி என்றே அது நிலைத்தது
தலித்துகள் இப்படி மயங்க, அவர்களையும் ஆண்டு கொண்டிருந்தான் வெள்ளையன் என்பதுதான் இன்னொரு கோணம்
தலித் விடுதலை நடந்ததா? இல்லை, ஆளும் வர்க்கம் மாற்றபட்டது அவ்வளவுதான்
இந்த கொண்டாட்ட சிக்கல் அவ்வப்பொழுது வெடிக்கும், தலித் மக்கள் தங்கள் வெற்றியின் அடையாளமாக அங்கு கொண்டாட, நீங்கள் வெள்ளையனோடு சேர்ந்து பெற்ற வெற்றி தேசதுரோகம் என சொல்ல, ஒரே சண்டை
கடந்தமுறை இச்சண்டை மிக பெரிதாகி இப்பொழுது வரை தீவிரம் குறையவில்லை
நேற்றுகூட சில தலித் ஆதரவு எழுத்தாளர்கள் 6 பேரை கைது செய்திருக்கின்றது அரசு, விஷயம் வெடிக்கின்றது
தமிழகம் இன்னும் இதில் பொங்கவில்லை, விரைவில் தலித் தலைவர்கள்,திராவிட சிங்கங்கள் எல்லாம் பொங்கலாம்
இதில் செய்ய வேண்டியது ஒன்றுதான்
வெற்றியோ தோல்வியோ இரு தரப்புமே வெள்ளையனுக்கு அடிமையான கோஷ்டி இதில் என்ன சர்ச்சை வேண்டியிருக்கின்றது என சொல்லி இரு தரப்பையும் கண்டித்து அனுப்ப வேண்டும்
(தமிழகத்தில் கட்டபொம்மன் படை , பூலித்தேவன் படை வரை ஏராளமான தலித் மக்கள் இருந்தார்கள்
அவர்களுக்கு நடந்ததெல்லாம் தலித் தோல்வியா, அல்லது சில இடங்களில் பூலித்தேவன் போன்றோரின் படைகள் வெள்ளையனை விரட்டியது எல்லாம் தலித் வெற்றியா?
தமிழகம் இந்த மராட்டியர்களை போல் சிந்திக்கவில்லை என்பதுதான் ஆறுதல்)