தமிழகம் என்ன டிரெயினிங் சென்டரா?
என் திருமணம் முடிந்த பின்பு நானும் எனது கணவரும் கொடைகானலில் உள்ள பழங்குடி மக்களுக்காக போராட உள்ளோம் : இரோம்_ஷர்மிளா
இவ்வளவு பெரும் இந்தியாவில், இந்த அம்மணி ஏன் கொடைக்கானலுக்கு குடியேற வந்தது எனும் பொழுதே ஒரு சந்தேகம் வலுத்தது
ஏதோ பின்னணியில்தான் இந்த அம்மையார் வந்திருக்கின்றாரா? சரி, இங்குள்ள புரட்சியாளர்களே ஒன்றும் செய்யமுடியாமல் கத்திவிட்டு, அழுதுவிட்டு மல்லாக்க கிடக்கின்றார்கள்
இதில் இறக்குமதி வேறா? இங்கு என்ன போராட்டகாரர்களுக்கா குறைவு?
எல்லாரும் இங்குவந்து போராட இது என்ன டிரெயினிங் சென்டரா?
ஒவ்வொரு தமிழனும் போராளிதான், ஆனால் ஆளாளுக்கு ஒரு கொள்கையில் தலைகீழாக நிற்பான் அவ்வளவுதான்
மான தமிழனுக்கு எங்கிருந்தோ வந்த மணிப்பூர்காரி போராடுவதா? அவமானம்
இங்கு நாங்கள் போராடுகின்றோம், நீங்கள் கிளம்பலாம்
உடனே மணிப்பூர் செல்லும் ரயிலுக்கு இரு டிக்கெட்டுகளை புக் செய்ய வேண்டும்
இமயமலையிலிருந்து வந்துவிட்டால் தானும் அகத்தியர் எனும் நினைப்பு வந்துவிடும் போல..