தமிழகம் முழுக்க சுற்றுபயணம் தொடங்குகின்றார் ஸ்டாலின் : செய்தி
தமிழகம் முழுக்க சுற்றுபயணம் தொடங்குகின்றார் ஸ்டாலின் : செய்தி
நல்லது, திமுக தலமை எடுத்திருக்கும் மிக சரியான முடிவு. தமிழகம் எதிர்காலம் தெரியாமல் தத்தளிக்கும் வேளையில் மக்களை காக்க திமுக இருக்கின்றது எனும் மாபெரும் நம்பிக்கையினை கொடுக்கும் கடமை திமுகவிற்கு இருக்கின்றது
ஆனால் சென்றோமா? பார்த்தோமா என்றிருந்தால் அதனால் சுத்த பிரயோசனமில்லை
மாறாக மக்களுக்கு நம்பிக்கையூட்டவேண்டும், அவர்களை திரட்ட வேண்டும். ஒவ்வொரு தமிழன் மனதிலும் இந்த இருளில் இருந்து திமுக தமிழகத்தை மீட்கும் எனும் நம்பிக்கையினை விதைக்க வேண்டும்.
அந்த நம்பிக்கையில் தமிழர் திரள வேண்டும்
மிக மிக நல்ல முயற்சி இது. இதனை எப்படி பயன்படுத்தி மக்கள் சக்தியினை திரட்ட போகின்றார் ஸ்டாலின் என்பதைத்தான் தமிழகம் எதிர்பார்க்கின்றது
வாழ்த்துக்கள் ஸ்டாலின், வாருங்கள் வந்து மக்களோடு மக்களாக தந்தை வழியில் கலந்துகொண்டு மக்களை திரட்டுங்கள்.
தமிழகத்தின் உரிமைக்காக மக்களை திரட்டும் சக்தி எந்நாளும் திமுகவிற்கு உண்டு என்பதை நிரூபியுங்கள்
அந்த மக்கள் திரளில் இந்த செயலற்ற அரசு முடியட்டும், காரிருள் விலகட்டும், தமிழகத்தில் விடியட்டும்.