தமிழக அரசிற்கு நிதி நெருக்கடி… இன்னும் பிற…

தமிழக அரசிற்கு நிதி நெருக்கடி

ஸ்கூட்டி வாங்க மானியம் உட்பட பல விஷயங்களில் தமிழக அரசு தாராளமாக நடந்துகொள்வதால் பெரும் நிதிநெருக்கடி ஏற்பட்டிருக்கின்றதாம்

அதாகபட்டது பணம் கொடுத்து வோட்டுவாங்கி பழக்கபட்டவர்களுக்கு, பணம் கொடுத்து நல்ல பெயரையும் வாங்கும் பெரும் கனவு இருக்கின்றது

ஜெ மரணத்திற்கு பின் அக்கட்சி சம்பாதித்திருக்கும் பெயர் தற்போது அப்படி

நிதி நெருக்கடி ஒருபுறம், சசிகலா ஜெயில் ஜெயா மரண சர்ச்சை என நீதிநெருக்கடி ஒரு பக்கம்

ஆக தமிழக அரசு நிதி, நீதி என பல நெருக்கடிகளில் சிக்கியிருக்கின்றது


ஆதார் எண் இல்லாத மாணவர்களுக்கு மதிய உணவு இல்லை : மத்திய அரசு அறிவிப்பு

பிடியரிசி திட்டம் என காமராஜர் அறிவித்த காலங்களில், சிலர் சாப்பிட மட்டும் வருகின்றனர், எங்கள் ஊர் மக்கள் கொடுக்கும் அரிசியில் அடுத்த ஊர் குழந்தைகள் சாப்பிடுவதா?

இப்படி இன்னும் ஏராள சர்ச்சைகள் வந்தன‌

காமராஜர் சொன்னார் “இது என்ன பேச்சுண்ணேன், இந்த நாட்டு பிள்ளைகள்தான சாப்புடுதுண்ணேண், அடுத்த நாட்டு பிள்ளைகளா வந்து சாப்புடுதுண்ணேன்?”

அப்படி ஒரு நாட்டுபற்றும், குழந்தைகள் மீது பாசமும் அவருக்கு இருந்திருக்கின்றது

இப்பொழுது அதார் அட்டை இல்லை என்றவுடன் சீன, பாகிஸ்தான், அரேபிய குழந்தைகளா வந்து சாப்பிடபோகின்றது

இந்நாட்டு குழந்தைகள் அல்லவா உண்ண போகின்றது.

ஆனாலும் இந்த மத்திய அரசின் கடமை உணர்ச்சிக்கு இந்நாட்டு சிறுவர்கள் என்ற‌ அபிமானம் கூட இல்லாமல் போய்விட்டதுதான் கொடுமை..


வரும் செய்திகளை கண்டால், நயந்தாராவே கண் கலங்கி , மனம் வருந்தி சிம்புவிற்கு கோயில் கட்டினாலும் கட்டலாம் போல.

சிம்புவிற்கு சுக்கிர, குரு திசை எல்லாம் தொடங்கிவிட்ட நேரம்


 ஐக்கிய‌ நாடுகள் சபையில் விரைவில் ஐஷ்வர்யா தனுஷின் பரத நாட்டியம்

ஆடுவது இவர், இசை யார் அனிருத்தா? “வாய்பாட்டு” பாடுவது யார் சுசித்திராவா? அல்லது ஆண்டிரியாவா?

இவரின் பரதநாட்டியத்தை தொடர்ந்து, தனுஷின் “பார்”நாட்டியம் இடம்பெறுமா? இல்லையா? என்பதுபற்றி இதுவரை தகவல் இல்லை