தமிழக அவமானம்
காஷ்மீர் விவகாரத்துக்காக டெல்லியில் ஆகஸ்ட் 22ம் தேதி திமுக அறிவித்திருக்கும் போராட்டம் , தமிழக அவமானம்
கலைஞர் மீனுக்கு தூண்டிலிட்டவர், அவர் மகனோ தவளைக்கும் முதலைக்கும் தூண்டிலிட்டுகொண்டிருக்கின்றார்
அதையும் சில பதர்கள் ஆஹா, ஓஹோ என சொல்லிகொண்டிருக்கின்றன, அவர்கள் அறிவு அவ்வளவுதான்
சீனபோருக்கு பின்பு தடை செய்யபடும் நிலையிலிருந்த திமுகவினை அண்ணா மீட்டு தேசியத்தில் கலந்தார்
ராஜிவ் கொலையில் சிக்கிய திமுக தடை செய்யபடும் அளவுக்க்கு சென்ற பொழுது வைகோவினை பலிகொடுத்து கலைஞர் கட்சியினை காத்தார்
இருமுறை அப்படி மீண்டகட்சியினை ஸ்டாலின் மறுபடியும் சிக்கலில் இழுத்துவிடுகின்றார்
இவர் அபிமன்யும் அல்ல , மீறி சிக்கினால் இவரை மீட்க யாரும் இல்லவும் இல்லை
எதை செய்யகூடாதோ அதை சரியாக செய்கின்றது திமுக
திமுக எனும் தேசவிரோத கட்சி,பிரிவினைவாத கட்சியினை எண்ணி ஒவ்வொரு இந்திய தமிழனும் நாணி தலைகுனிகின்றான்
வாக்களித்தவன் கூட வேதனையில் நெளிகின்றான்
மிக வேகமாக முடிவுரை எழுதபட வேண்டிய கட்சியாகிவிட்டது திமுக
முக ஸ்டாலின் என்பவர் அதனை நிச்சயம் செய்வார்
தந்தை செய்துவிட்ட் சென்ற தவறை சரியாக்குவதுதான் நல்ல மகனின் கடமை, அதை மிக சரியாக செய்யும் ஸ்டாலின் என்பவருக்கு வாழ்த்துக்கள்