தமிழக காங்கிரஸ் செயற்குழு கூடியது
தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடியது
இது எல்லா கட்சிகளின் பொதுகுழுவும் கூடும் நேரம், அப்படி தமிழக காங்கிரசும் கூடிவிட்டது
சிதம்பரம் மிக அழகாக பணபிரச்சினையினை எடுத்து பேசினார் என்கின்றார்கள், அவர் பேச்சு அர்த்தமுள்ளது இனி தேடி கேட்கவேண்டும்
குஷ்பூ மிக அழகான கம்பீரத்துடன் அமர்ந்திருந்தார், காண இரு கண்கள் நிச்சயம் போதாது, நிறுத்திவிடலாம் இல்லை கம்பனுக்கு போட்டி காவியம் எழுதும் நிலை வரும்
மேடையில் இந்திரா, காமரஜர் படங்கள் எல்லாம் இருந்தன
தவ வாழ்வு வாழ்ந்த காமராஜரை பல ஆண்டுகள் அருகிருந்து கவனித்த சமையல்காரன் வைரவன் என்பவரின் படம் எங்காவது இருக்கின்றதா? என தேடினேன் இல்லை
சரி அந்த முதியவர் தலைவர்கள் வரிசையில் இருக்கின்றாரா? என்றாலும் இல்லை
இந்த நன்றி கெட்ட தமிழக காங்கிரசை…
இப்படி நன்றி இல்லா கட்சி எப்படி உருப்படும்?
அதிமுகவினை பார்த்து கொஞ்சமாவது பாடம் படிக்க கூடாதா?