தமிழரில் நாம் ஈழதமிழரை கவனிக்கின்றோம்
தமிழரில் நாம் ஈழதமிழரை கவனிக்கின்றோம்
சும்மா சொல்ல கூடாது, தமிழக தமிழருக்கும் அவர்களுக்குமான கல்வி இடைவெளி 150 ஆண்டுகள் அதிகம்
ஆம் தமிழக பிராமண சமூகத்தைவிட அவர்கள் பெற்ற கல்வியும் அதனால் அவர்கள் பெற்ற வீச்சும் அதிகம்
முதலில் கொழும்பு, பின்பு சிங்கப்பூர் மலேசியா அதன் பின் ஐரோப்பா அமெரிக்கா என அவர்களின் கொடி உச்சததில் பறக்கின்றது
மலேசியா முதல் ஐரோப்பிய நாடுகள் வரை மகா முக்கிய தொழிலதிபர்கள் அவர்களே, இளம் தொழில் தலைமுறையும் அவர்களே
அவர்கள் எல்லா தொழிலுமும் எல்லா கல்வி தேர்ச்சியிலும் மிக குறிப்பிட்ட இடத்தை வகிக்கின்றனர்
அன்றே சிங்களன் அவர்களை ஒடுக்க நினைத்ததும், அவர்கள் அடங்க மறுத்து நாங்கள் எதில் குறைந்தவர்கள் என மல்லுக்கு நின்றதும் சும்மா அல்ல, விஷயம் இருக்கின்றது
நாம் அவர்களை அணுக்கமாக கண்காணிக்கின்றோம்
தமிழக தமிழர்களின் கல்வியும் தரமும் அவர்களின் கால் தூசிக்கு ஈடாகா
அவர்களின் தமிழும் பக்தியும் சிலாகிக்க கூடியவை, பிறமொழி கலவா தூயதமிழும் அதைவிட அழகு அவர்களின் பக்தியும் நிச்சயம் உயர்வானவை
கதிர்காமம் முதல் நல்லூர் கந்தசாமி ஆலயம் வரை கொண்ட பக்தியினை உலகெல்லாம் இன்றும் சுமந்து திரிகின்றனர், வெளிநாட்டு இந்து ஆலயங்களில் பெருமான்மை ஆலயம் அவர்களுடையதே
அவர்கள் தமிழனை விட 200 வருடம் கல்வியில் முன் நிற்கின்றனர் , அங்கு எந்த பெஅங்கு பெரியாரா படிக்க வைத்தார்?
அட உலகின் முதல் பெண் பிரதமர் என சிங்கள பெண்மணி பண்டாரநாயக பெருமை பெற்றாரே? அம்மணி என்ன திராவிட கழக தொண்டரா?
அதுதான் காலமாற்றம்…
இவ்வளவுக்கும் சாதி அமைப்பு தமிழ்நாட்டை விட அதிகம் சுற்றிய பூமி அது
இந்துவாகவும் இருந்து கொண்டு மதத்தை விடாமல் கல்வியில் உச்சம் பெற்று எப்படி அவர்களால் சாதிக்க முடிந்தது?
உண்மையான தமிழ்பற்றும் தன் மத அடையாள வைராக்கியமும் இருந்தால் அது சாத்தியம், நிச்சயம் சாத்தியம்
வெள்ளையன் காலத்தில் படித்தார்கள், மதத்தை விடாமல் படித்தார்கள், இன்று உலகெல்லாம் வியாபித்திருக்கின்றார்கள்
தமிழர்கள் என்றால் எப்படி இருக்கவேண்டும் என அவர்களைத்தான் காட்டமுடியும்
ஏன் அவர்கள் சிறந்தார்கள் என்றால் அவர்களை கெடுக்க பகுத்தறிவு பெரியார் திராவிடம் இன்னபிற இம்சைகள் அங்கு இல்லை, பெரியாரை அவர்கள் ஏறேடுத்தும் பார்க்கவில்லை
ஈழதமிழர் தங்கள் வரலாற்றில் செய்த மிக மிக பெரிய தவறு, தங்களை போலவே அர்பணிப்பும் தமிழ்பற்றும் மிக்கவர்கள் திராவிட இயக்கத்தார் என தப்புகணக்கு போட்டது
நாமோ கல்வியும் பக்தியும் இரு கண்களாய் கொண்ட தமிழராயிற்றே,இவர்களோ கடவுளே இலை என சொல்லும் நாத்திக படிக்கா கூட்டமாயிற்றே பொருந்துமா? என அவர்கள் யோசிக்கவில்லை
அவர்களுக்கு இவர்களை தவிர தெரிவு இல்லை, இவர்களை தங்களை போன்றே கொள்கையாளர் என நம்பினார்கள் அவர்கள்
இது நாடக கம்பெனி என அவர்களுக்கு தெரியவில்லை
அதன் விளைவு அவர்களின் தமிழீழ கனவு தற்காலிகமாக நொறுங்கியது
திராவிடத்தால் கெட்டது தமிழ்நாடு மட்டுமல்ல ஈழகனவுமே..
என்றொரு நாள் தமிழக தமிழன் பக்கம் வராமல், இந்த பெரியார் திராவிட தமிழ்தேசிய நாடக கம்பெனிகளிடம் சிக்காமல் தமிழீழம் அமைக்க முயற்சிப்பார்களோ அன்று நிச்சயம் வெற்றிபெறுவார்கள்
இது ஒருகாலத்தில் நிச்சயம் நடக்கும், அவர்கள் செய்திருக்கும் சமயபணிக்கும் அவர்கள் பெற்றிருக்கும் கல்விக்கும் அது நிச்சயம் நடக்கும்
இந்த பகுத்தறிவு இம்சைகள், வெற்று கடவுள் மறுப்பு கோஷமெல்லாம் யாரையும் உருப்படவிடாது என என்று ஈழதமிழர் உணர்வார்களோ அன்று அவர்களுக்கு நல்லது நடக்கும்
எமக்கு தெரிந்தவரை ஓரளவு உணர்ந்துவிட்டார்கள், அதற்கு முழு காரணம் திக, திமுக மற்றும் அங்கிள் சைமனின் அல்ட்ராசிட்டி