தமிழிசை பெரும் சிக்கலில் சிக்க போகின்றார்
தமிழிசை பெரும் சிக்கலில் சிக்க போகின்றார்
அதாகபட்டது தேசவிடுதலை போராட்டத்தில் பங்குபெற்ற தியாகியும், பாகிஸ்தான் தளபதியியினை லாகூரில் புகுந்து சுட்டவருமான தேசபக்தன் ராக்கெட் ராஜா என்பவரை போலீஸ் கொல்ல தேடுகின்றதாம்
அவர் நாடார் என்பதால், நாடார் சங்கங்களுக்கு எல்லாம் பெரும் கவலை, தேச பக்தர்களையும், தியாகிகளையும், பெரும் விஞ்ஞானிகளையும் இப்படி கொல்ல தேடும் போலிசை என்ன செய்ய?
நாடார்களின் காவல்காரன் சரத்குமாரை காணவே இல்லை, இன்னும் பலர் பெரும் வியாபாரிகள், ரெய்டு வந்தால் ராக்கெட் ராஜா வந்தா கணக்கு காண்பிப்பார்? அதனால் அமைதி
இதனால் ராக்கெட் ராஜாவினை மிக நேசிக்கும் தேசபக்தர்களுக்கு தமிழக நிழல் முதல்வரான வெங்கய்யநாயுடுவிடம் பேசமுடியாமல், கட்சியின் கருப்பு தாமரை தமிழிசையிடம் செல்கின்றார்கள்
பொன்னாரை ஏன் விட்டுவிட்டார்கள் என தெரியவில்லை, அய்யகோ அவர் நாடார் இல்லை போலும்..
தமிழிசை யார்? நாட்டு நலனுக்காக தன் காங்கிரஸ் தந்தையினயே கட்சியோடு தூக்கி எறிந்துவிட்டு பாஜகவில் இணைந்த தேச பக்தை
அந்த மாபெரும் தேசபக்தைக்கு இப்பொழுது பெரும் சோதனை
சாதி என சொல்லி ஒரு ரவுடிக்கு உதவுவாறா? அல்லது “போங்கடா நாடார் வாக்கே வேண்டாம் , நாடுதான் எனக்கு முக்கியம்..” என வாளாயிருப்பாரா?
நாடார் வாக்குகளை பகைத்துகொள்ளவும் தமிழிசையால் முடியாது
பாகுபலியா, மகிழ்மதி அரசா? என தவித்து நின்ற சிவகாமி தேவி நிலையில் சிக்கியிருக்கின்றார் தமிழிசை
மேடம் தமிழிசை இந்த “அக்னி பரீட்சையில்” எப்படி தேற போறேள்??
பிராமண கட்சி என பெயரெடுத்த பாஜகவினை நாடார் கட்சி என ஆக்க போறேளா???
தமிழகத்தில் காவிகொடி நாடாருக்காகவா பறக்க போகின்றது என யாரும் கேட்டால் என்ன சொல்வீர்கள் தமிழிசை?