தமிழ்நாட்டின் பெரும் சீர்கேடுகளுக்கும் யார் காரணம?

தமிழ்நாட்டில் நரிமணம் பகுதியில்தான் முதன் முதலில் இந்த மீத்தேன் போன்றவை எடுக்கபட்டன, பின்னர் அது அவ்வப்போது விரிவுபடுத்தபட்டன
அது தொடங்கபட்ட ஆண்டு 1985, அப்போது எந்த மகராசன் அல்லது முகராசன் ஆண்டுகொண்டிருந்தார் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை
தமிழ்நாட்டின் ஒரே அறிவாளியாக தன்னை நினைத்து ஆண்டுகொண்டிருந்த அந்த ராமசந்திரனுக்கு தொலைநோக்கு என்று ஒன்று ஒருகாலமும் கிடையாது, அப்படி இருந்திருந்தால் சசிகலா எல்லாம் உருவாகியிருக்கமட்டார்
ஆட்சியிலும் அப்படித்தான், பணக்காரர்கள் பொறியியல் கல்லூரியில் படிக்கட்டும், ஏழைகள் அரசு கல்லூரியில் படிக்கட்டும் என சொல்லி அவற்றை திறந்து இன்று எல்லோரும் வேலையற்று அலைய அவர்தான் காரணம்
பொறியியல் கல்வி தரம் அவராலேதான் சீரழிந்தது
அப்படி கொஞ்சமும் தொலைநோக்கு இல்லா ராம்சந்திரன் காலத்தில்தான் கல்பாக்கம் அணுவுலை, இன்னும் ஏராள கொடூர திட்டம் தமிழகத்திற்கு வந்தன
அதில் ஒன்றுதான் இந்த மீத்தேன்
வறண்ட பகுதியில் எடுப்பவர்கள், நாளை விவசாய பூமிக்கு வரமாட்டார்களா? தொலைநோக்கில் ஏதும் செய்யவேண்டாமா? என சிந்திக்காமல் தலையாட்டிவிட்டார் அவர்
தலை ஆட்டாவிட்டால் அடித்து ஆட வைத்திருப்பார்கள், அவருக்கு இருந்த டெல்லி சூனியம் அப்படி
காவேரி வறண்டால்தான் அதன் படுகையில் மீத்தேன் எடுக்கமுடியும் என்பது 30 ஆண்டுகால திட்டத்தின் தொடர்ச்சி, அதுதான் அரங்கேறிகொண்டிருக்கின்றது
பாலை நிலத்தில் மீத்தேன் எடுத்தால் பிரச்சினை இல்லை, அப்படியானால் காவேரியினை தடுத்து மொத்தமும் பாலை ஆக்கிவிட்டால்..
இன்றும் காவேரி தீர்ப்பு அரசிதழழில் வராத மர்மம் இப்படியும் இருக்கலாம்
ஆக அந்த முகராசன் தொடங்கிவைத்த சிக்கல்தான், அவரின் நூற்றாண்டில் பற்றி எரிகின்றது
அதனை பற்றி எல்லாம் யாரும் பேசமாட்டார்கள், நாமும் பேச கூடாது
தொலைநோக்கில்லா தலைவர்கள் வாய்த்த தமிழகத்தின் சாபம் இது, காமராஜருக்கு பின் அப்படி ஒரு தலைவர் இல்லை
ஒரு ஆலைக்கு அனுமதி கொடுத்தார், அது கிட்டதட்ட 70 கிராமங்களுக்கு அப்பால் இருந்தது, அவ்வளவு தூரமாக ஏன் அனுமதிகொடுத்தீர்கள் என கேட்டார்கள்
“அவன் அவ்வளவு தூரம் மின்சாரம் கொண்டுபோவான்ல, அதிலிருந்து இந்த மின்சாரவசதியில்லா 70 கிராமங்களுக்கும் மின்சாரம் கொடுப்பது நமக்கு ரொம்ப லேசுண்ணேன்..
70 கிராமங்களுக்கும் ரோடு முதல் எல்லாம் தரமா கிடைக்கும்ணேண்..”
இதன் பெயர்தான் தொலைநோக்கு
அதன் பின் அப்படியான தொலைநோக்கு முதல்வர் நமக்கு இல்லை, கலைஞர் நிச்சயம் அறிவாளி ஆனால் காமராஜரை அவ்வளவு சீக்கிரம் அவர் வீழ்த்தியிருக்க கூடாது
ஆனாலும் தன்னை நீரூபிக்க கலைஞருக்கு வேறு வழி அன்று இல்லை, அவரை எதிர்த்தே வளர்ந்தார், ஒரு வகையான ராஜதந்திரம் அது
கலைஞரின் பொதுநலத்தில் சிறிது சுயநலமும் இருந்ததை மறுக்கமுடியாது.
ஆட்சிக்கு வந்தவுடன் அவருக்கு சிக்கல் ராமசந்திரன் வடிவில் வந்தது, பின் அது ஜெயலலிதா என திசைமாறியது, இதனை சமாளிக்க நேரமில்லாதவருக்கு வேறு எதனை சமாளிக்கமுடியும்?
அவர் காலத்தில் கட்டிய சட்டமன்ற கட்டிடம் கூட அனாதையாக கிடக்கின்றது
இப்படிபட்ட சிக்கலில் மாட்டிய கலைஞரும் பெரிதாக பிரகாசிக்க முடியவில்லை, உண்மையில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ஈழபிரச்சினையில் அகில இந்திய டெசோ எல்லாம் அவரின் மிக சிறந்த திட்டம் என்பதை மறுக்கமுடியாது
இன்று தமிழக விவசாயிக்குள்ள ஒரே ஆறுதல் இலவச மின்சாரம் மட்டும்தான், அதுவும் விலையென்றால் அவன் கிணற்றை விற்றுவிடவேண்டியதுதான்.
ஆக தொலைநோக்குள்ள ஒரு முதல்வரும் வரவில்லை, மாநிலம் இப்படி நாசமாயிற்று
அப்படி தொலைநோக்கு முதல்வர்கள் இருந்த நாற்காலியில் இப்பொழுது பழனிச்சாமி இருக்கின்றார்
அவருக்கு தொலைநோக்கு அல்ல, தொலைவு நோக்கு இருக்கின்றது. ஆம் தூரத்தில் பெங்களூர் சிறையினை பார்த்துகொண்டே இருக்கின்றார்
மீத்தேன் பிரச்சினை உச்சத்திலும் அதனை 1985ல் அனுமதித்த அந்த முகராசனை பற்றி யாரும் விமர்சிக்கவில்லை பார்த்தீர்களா?
தமிழ்நாட்டின் பெரும் சீர்கேடுகளுக்கும், ஈழ அழிவிற்கும் அவர்தான் பெரும் காரணம், ஆனால் யாரும் அதனை பற்றி பேசமாட்டார்கள்..
இதுதான் அவரின் ஜாதக அமைப்பு..