தமிழ்நாட்டில் கஞ்சா உட்பட போதையில் அட்டகாசம் செய்யும் கும்பல் அதிகரித்துவிட்டது

தமிழ்நாட்டில் கஞ்சா உட்பட போதையில் அட்டகாசம் செய்யும் கும்பல் அதிகரித்துவிட்டது

நாம் அரசியல்வாதிகளை சொல்லவில்லை, அவர்களின் போதை வேறு, புகழ் மற்றும் அதிகார போதை அது. அந்த போதைக்கு கஞ்சாவும் அபினும் தேவை இல்லை. கிழங்கை தின்ற பன்றியும், கருவாட்டை ருசிபார்த்த பூனையும் வெட்கம் மற்றும் அடி உதைக்கு அஞ்சாது என்பார்கள்

அவர்களின் போதை அந்த வகை

நாம் சொல்லும் போதை வேறு, இந்த கோஷ்டிகள் கடும் போதையினை ஏற்றிகொள்கின்றன அந்த போதையிலும் சரியாக தனியாக சுற்றும் ஜோடிகளை கண்காணித்து ஆளில்லா காட்டுக்குள் அந்த பெண்களிடம் அட்டகாசம் செய்கின்றன‌

சில விவரம் வருகின்றது, நிறைய வருவதில்லை

விஷயம் சொல்வது இதுதான், தமிழ்நாட்டில் இப்பொழுதெல்லாம் எல்லா வகை போதையும் நடமாடுகின்றது, துப்பாக்கி நடமாடுகின்றது

இதை எல்லாம் கட்டுபடுத்தவேண்டிய அரசு நமக்கு எதிரியே இல்லை என்ற போதையில் இருக்கின்றது

எதிர்கட்சியோ யார் எதிரி என குழம்பி அந்த விரக்தியில் போதை ஏறி ஒருமாதிரி திரிகின்றது