தமிழ்நாட்டில் கொத்தடிமை கலாச்சாரம் பெருகிவருவது கவலையளிக்கின்றது

தமிழ்நாட்டில் கொத்தடிமை கலாச்சாரம் பெருகிவருவது கவலையளிக்கின்றது, திமுக அதிமுக காங்கிரஸ் கொத்தடிமைகளை விடுங்கள். அவைகள் அடிமை வேடம் பூண்ட நரிகள் வாய்ப்பு கிடைத்தால் கணிசமாக சம்பாதிக்கும்

இது ஏழை எளியவர்களை, ஏனென்று கேட்க நாதியில்லாதவர்களை கொத்தடிமையாக்கும் விஷயம், நிறைய வந்து கொண்டே இருக்கின்றன, வறுமையும் அறியாமையும் அவர்களுக்காக கேள்வி கேட்க யாரும் இல்லா அபல நிலையினையும் பலர் தனக்கு சாதகமாக்குகின்றனர்

சமீபத்தில் ஒரு குழந்தை செத்து தன் பெற்றோர் கொத்தடிமையாய் இருந்ததை உலகுக்கு சொன்னது, அக்குடும்பம் மீட்கபட்டதா என்பது தெரியவில்லை

நேற்று பள்ளி மாணவன் சக மாணவர்களால் கடத்தபட்டு கொத்தடிமைக்கு விற்கபட்ட சம்பவம் வெளிவந்துள்ளது

நாம் அச்சபடும் விஷயம் என்னவென்றால், தமிழ்நாட்டில் சக தமிழனே சகஜமாக கொத்தடிமையாக்கபடும் பொழுது வடமாநிலத்தில் இருந்துவரும் தொழிலாளர் நிலை என்ன?

அந்த ஜீவன்கள் பரிதாபம் அல்லவா?

வேலையாள் தன் கூலிக்கு உரிமையுடைவன், அவன் கூலியும் கொடுக்காமல் அடிமைபடுத்தி வைத்திருப்பது வெகு சாமார்த்தியமாக தெரியலாம் ஆனால் அதெல்லாம் பெரும் பாவம், தன் சந்ததிக்கு விட்டு செல்லும் தீர்க்கமுடியா பாவம்