தமிழ் திரையுலகுக்கான ஆஸ்கர் விருதை இழக்க வைத்து விட்டது
திருச்சி நகைகொள்ளை முருகனை விசாரித்த காவல்துறை தலையில் அடித்து சிரித்துகொண்டிருக்கின்றது
ஆம் அவன் கிட்டதட்ட 100 இடங்களில் கொள்ளை அடித்திருக்கின்றான், அதை கொண்டு தன் அக்கா மகனை வைத்து தெலுங்கில் இரு படம் தயாரித்திருக்கின்றான், ஆனால் வெளிவரவில்லை
அவனுக்கென்ன பைனான்சியர் சிக்கலா? வட்டி பிரச்சினையா? இல்லை அன்பு செழியன் போல ஏதும் மிரட்டலா?
அவன் கொள்ளை அடித்து மறுபடியும் சினிமா தயாரித்திருகின்றான், அப்பொழுதுதான் சிக்கி இருக்கின்றான். கொஞ்சகாலம் பிடிபடாமல் இருந்திருந்தால் ஆக சிறந்த தமிழ் சினிமா ஒன்றை தயாரித்திருப்பானாம்
அன்னார் அரசியலுக்கு ஆசைபடாமல் சினிமாவுக்கு சென்றுவிட்டார் என அமைதியடைய ஒன்றுமில்லை, அவர் சினிமாவில் வெற்றியடைந்து அரசியலுக்கு வர திட்டமிட்டிருக்கலாம் அரசியலில் லைசென்ஸ்டோடு கொள்ளையடிக்கலாம் என்பது அவனுக்கு தெரியாமலா இருந்திருக்கும்
சினிமாவில் அரசியல்வாதி பணம் முதல் ஏராளமான கொள்ளையர் பணம் கிடக்கின்றது அதில் நகைகடை கொள்ளையன் பணமும் கலந்திருக்கின்றது என்பதை வரலாறு குறித்துகொண்டது
எப்படியோ முருகனை அவசரபட்டு கைது செய்து அவனின் ஆகசிறந்த தமிழ்படத்தை தயாரிக்கவிடாமல் செய்து, தமிழ் திரையுலகுக்கான ஆஸ்கர் விருதை இழக்க வைத்து விட்டது