தமிழ் படிக்காமல் இருந்ததற்கு வருந்துகின்றேன் : மோடி
தமிழ் சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி, தமிழ் படிக்காமல் இருந்ததற்கு வருந்துகின்றேன் : மோடி
இது மொழி மாநாட்டிலோ, அரசியல் மேடையிலோ மோடி சொன்னது அல்ல மாறாக மாணவர்களுடனான விவாதத்தின்பொழுது சொன்னது என்பதால் மோடிக்கு வாழ்த்துக்கள்
இது நாடகம், நடிப்பு என கலாய்ப்பதில் அர்த்தமில்லை. மோடி தமிழின் பெருமையினை சொன்னால் அதற்குரிய இடத்தை கொடுங்கள் என கேட்கலாம்.
இந்தி திணிப்பு இன்னபிற விஷயங்களில் தமிழக நியாயத்தினை எடுத்து சொல்லலாம், உறவுக்கு கை கொடுப்பது ஒன்றும் தவறில்லை
தமிழ் மிக தொன்மையான மொழி அதுவும் சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி என சொன்ன மோடிக்கு மீண்டும் வாழ்த்துக்கள், இந்த உண்மையினை ஒப்புகொண்ட மோடி அந்த தமிழுக்கு ஏதும் செய்தால் மிக்க நல்லது