தம்பி நினைவிருக்கின்றதா

தம்பி நினைவிருக்கின்றதா, அன்று திராவிட நாடு கோரிக்கையினை கைவிடும் பொழுது அண்ணண் என்ன சொன்னேன்?

தேர்தலில் வென்று இனி ஆட்சி அமைப்போம் நீ மந்திரி என்றீர்கள்

ஆட்சி பதவி தவிர நீ வேறு எதை சிந்தித்தாய்? தம்பி திராவிட நாட்டு கோரிக்கையினை கைவிடுகின்றோமே அன்றி அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன. ஒன்றுபட்ட நாட்டில் மாநிய சுயாட்சி வேண்டும், மொழி உரிமை வேண்டும், அது வேண்டும் இது வேண்டும் என எப்படி நீட்டி முழக்கினோம்

ஆம் அண்ணா அதற்கென்ன?

அப்படி காஷ்மீர் விவகாரத்தில் கூட 370 சட்டத்தை நீக்கினாலும், அந்த சட்டம் வருவதற்கான காரணம் அப்படியே இருக்கின்றது. அங்கு மாநில சுயாட்சி வேண்டும், இஸ்லாமிய மக்களின் கண்ணியம் காக்கபட வேண்டும் என்றெல்லாம் முழங்கிவிட்டு உன் தனயன் வரவேண்டாமா?

அப்படித்தான் செய்ய வேண்டும் அண்ணா, ஆனால் தலைவர் முக ஸ்டாலின் செய்யவில்லை

அதுதான் தம்பி ஏன்?

அண்ணா நான் உங்கள் வளர்ப்பு, அவன் என் பிறப்பு

நீ பெற்றவனுக்கு பதிலாக ஒருவனை உருவாக்கியிருக்கலாம்

ஆம் அண்ணா தவறு செய்துவிட்டேன்

நீ எதை சரியாக செய்தாய்? கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்றேன் நான் மாறன், ஸ்டாலின் , கனிமொழி என்றாய் நீ.

கழகம் ஒரு குடும்பம் என்றேன், குடும்பம் ஒரு கழகம் என மாற்றினாய் நீ. ஏன் இப்படி செய்தாய் தம்பி

அண்ணா, பாபநாசம் படத்தின் கிளைமேக்ஸில் கலைஞானி இனமான கமலஹாசன்…

தம்பி அவர் பார்ப்பான்

சரி கலைமானி கமலஹாசன் வசனம் பேசியிருப்பார், அதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் அண்ணா

என்ன சொன்னார்?

“நீங்க ரொம்ப பெரிய மனுசன், விலாசமான மனசு, நான் சுயநலம் பிடிச்சவன், என் பொண்டாட்டி புள்ளதான் உலகம், அதுக்கும் மேல கனவும் காணுறதுல்ல… அதுல வேண்டா விருந்தாளியா ..

வேணும்னு செய்யல கை தவறி”

தம்பி, நெஞ்சுக்கு நீதி என்பது அதுதான். நீ ஆறு பாகமாக எழுதியதை அவன் 6 வரிகளில் சொல்லிவிட்டான்