தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி
தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி என்ற செய்தி பெரும் வருத்தமானது
நிச்சயம் கலைஞரை பிரிந்த நம் எல்லோரின் வலியினை விட அவரின் வலி பெரிது, கடுமையானது
அம்மையார் நலம் பெற்று வரட்டும், கலைஞரின் உடல்நலத்தை நீண்டநாள் காத்து நின்றதில் பெரும் பங்கு அவருடையது
அந்த ஆணிவேரில்தான் கலைஞர் எனும் சகாப்தம் இயங்கிகொண்டிருந்தது
கலைஞரின் மனைவி என்றாலும் வீட்டை தாண்டி எங்கும் கலைஞரோடு சென்றவரும் அல்ல, கட்சி அலுவலகம் கூட வந்தவருமல்ல
வீண் சர்ச்சைகளில் சிக்கியவருமல்ல, கட்சி, அரசியல் என ஒரு வார்த்தை பேசியவருமல்ல
அவ்வகையில் அவரின் குணநலன்கள் வாழ்த்துகுரியது
தமிழகத்தின் பிரதான அரசியல்வாதிகள் எல்லாம் அவர் கையால் உணவருந்தியிருக்கின்றார்கள்.
அந்த மகராசி நலம்பெற்று திரும்ப வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள்