தரகுறைவாக சைமன் பேசுவதை ஏற்க முடியாது

மறைந்த ஜெயலலிதா மேல் ஆயிரம் சர்ச்சை இருக்கலாம், ஆனால் அவரை தரகுறைவாக சைமன் பேசுவதை ஏற்க முடியாது

சாட வேண்டுமானால் அங்கிள் சைமன் எப்படி சாட வேண்டும்?

ஜெயா ஒன்றும் போராளி அல்ல, நிச்சயம் தியாகியும் அல்ல‌

ஆனால் அவர் வந்தது சினிமா மூலம், சினிமாவே அவருக்கு அடையாளம் கொடுத்தது, அந்த பிரபலத்தை அவர் கட்சிக்கு பயன்படுத்தினார்

அங்கிள் சைமன் சாடவேண்டுமென்றால் சினிமா மோகத்தை சாடட்டும், சினிமாவே தமிழன் சீரழிவுக்கு காரணம் என்ற உண்மையினை சொல்லட்டும்

சொல்வாரா? நிச்சயம் சொல்லமாட்டார் காரணம் அவரும் சினிமாக்காரர்

ஜெயா இருக்கும் வரை ஈழத்தாய் என்றது என்ன? இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என ரைமிங்காய் பேசியது என்ன?

இப்பொழுது திராவிட சுடுகாட்டில் அவர் மல்லாக்க கிடக்கின்றார் என மிக கொச்சையாக பேசுவது என்ன?

ச்சீ. த்தூ…நாயும் பிழைக்குமா இந்த பிழைப்பு, பன்றிக்கு கூட நன்றி உண்டு

அய்யா பழனிச்சாமி, உங்கள் தலைவியினை இப்படி மகா கொச்சையாக பேசுபவனை பற்றி உங்கள் அரசு என்ன நினைக்கின்றது?

அந்த இடம் திராவிட சுடுகாடாம்

அன்னார் எங்கு போவார் என்றால் அந்த சுடுகாட்டையும் கடந்து, கடல் கடந்து ஈழத்தில் போய் நிற்பார்

அங்கிள் சைமனே

ஈழத்து காந்தி செல்வாவும், அமிர்தலிங்கமும் திராவிட தலைவர்களிடம் தான் ஓடிவந்தனர்

ஆண்டன் பாலசிங்கமும், சந்திரஹாசனும் திராவிட தலைவர்கள் வீட்டில்தான் காவல் கிடந்தனர்

அந்த சுடுகாட்டில் படுத்திருக்கும் அண்ணாவின் பேச்சுத்தான் ஈழத்திலும் ஒலிபரப்பட்டு தமிழரிடையே நம்பிக்கை கொடுத்தது

அந்த சுடுகாட்டில் படுத்திருக்கும் கலைஞரின் எழுத்தும் பேச்சும்தான் ஈழதமிழரை இங்கு ஓடிவர செய்தது

அந்த சுடுகாட்டில் படுத்திருக்கும் ராமசந்திரந்தான் உங்கள் அண்ணன் பிரபாகரனுக்கு ஆதரவும் ஆயுதமும் இன்னும் என்னவெல்லாமோ செய்தவர்

ஆக உங்கள் மானமிகு அண்ணன் பிரபகரன் இந்த திராவிட தலைவர்களினால்தான் உருவானான், செய்ய கூடா செயல் செய்து செத்தும் போனான்

திராவிட கட்சிதான் உன் அண்ணனுக்கே அடைக்கலம் கொடுத்து வளரசெய்தது.

திராவிட கட்சிதான் வாஜ்பாய் முதல் பரூக் அப்துல்லா வரை அகில இந்திய அளவில் ஈழபிரச்சினையினை எடுத்து சென்று அகில இந்திய ஈழ ஆதரவினை பெற போராடியது

திராவிட கட்சிதான் உன் அண்ணன் பிரபாகரனை அமைதிபடையிடம் இருந்து மீட்டது

திராவிட கட்சிதான் சொந்த நாட்டு ராணுவத்துடன் மோதிய புலிகளுக்கு தமிழகத்தில் பகிரங்கமாக மருந்தும், உணவும் கொடுத்து ஆதரித்து தேசதுரோக பழி எல்லாம் ஏற்றது

இதெல்லாம் நடக்கும்பொழுது நீர் பாரதிராஜாவின் கேமரா,பாலு மகேந்திராவின் கேமராவினை எல்லாம் துடைத்துகொண்டிருந்தீர்

அவர்களுக்கு நீர் கேமரா மட்டும் துடைக்கவில்லை என்ற செய்திகள் கூட உண்டு

திராவிட கட்சிகள் நெருப்பாற்றில் நீந்தியபொழுது எங்கோ இருந்த நீர், இப்பொழுது வந்து ,சும்மா நன்றிகெட்ட தனமாக பேசி குழப்பம் விளைவிக்க வேண்டாம்

ஆக அங்கிள் சைமா, ஈழ மக்களை அரவணைக்க திராவிட கட்சி வேண்டும், ஈழ போராளிகளுக்கு சோறு போட்டு இடம் கொடுக்க திராவிட கட்சி வேண்டும்

ராஜிவ் கொலையில் நெருக்கடியில் சிக்கி திணற திராவிட கட்சி வேண்டும்

ஆனால் அதன் தலைவர்கள் புதைக்க இடம் திராவிட சுடுகாடா?

கொஞ்சமாவது நன்றி இருந்தால் இப்படி பேசுவீரா?

நன்றி இருக்க முதலில் கொஞ்சமேனும் அறிவு வேண்டும், உம்மிடம் அது ஏது?

உம்மிடம் ஒரே ஒரு வேண்டுகோள்

தயவு செய்து பேசும்பொழுது இடை இடையே “ஹாஹஹ: என வெங்க சிரிப்பு சிரிக்க வேண்டாம், உம்மேல் கொலைவெறியில் இருப்போர் அந்த சிரிப்பை பார்த்தவுடன் கடன் வாங்கியாவது உம்மை நோக்கி ஓடிவந்து கழுத்தை நெறித்து கொல்லும் ஆபத்து இருக்கின்றது