தற்கொலைகள்…

பிரபல காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதர் கம்போடியா நாட்டில் தற்கொலை

தற்கொலை செய்து சாக ஏன் இத்தனை கொலைகள், இத்தனை கோடிகள் சொத்து, இவ்வளவு பெரும் அழிச்சாட்டியம்??

உலகிலே முதன் முதலில் அதுவும் அடுத்த நாட்டில் சென்று தற்கொலை செய்த டான் இவராகத்தான் இருக்க முடியும்.


கோவை அருகே கிறித்துவ மத போதகர் தூக்குபோட்டு தற்கொலை

பைபிளில் இயேசுநாதரை விட யூதாஸை அதிகம் ரசித்திருப்பார் போலிருக்கின்றது.


ரஜினி, கமலுக்கெல்லாம் அரசியலைப் பற்றி என்ன தெரியும்? – வீரமணி

மகாபிரபு இங்கேயும் வந்துவிட்டீரா?

அது எப்படி? யார் ஆட்சியில் இருந்தாலும் அவர்கள் மனம் குளிரும்படி இவரால் பேச முடிகின்றது? 


தமிழக அரசின் செய்தி தொடர்பாளராக பதவியேற்றுவிட்டார் தமிழிசை..

வாழ்த்துக்கள் மேடம்.


“தமிழகத்தின் கெயில் திட்டத்தை நிறைவேற்ற எதிர்ப்புத் தெரிவிக்கும் விவசாயிகளுக்கு, திட்டம்குறித்த விழிப்புஉணர்வை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்” : பிரதமர் மோடி

இதோ சொல்லிவிட்டார் அல்லவா?

இனி எத்தனை கைது, எத்தனை அதிரடி என பாருங்கள், ரத்த காடாக‌ போகின்றது மேற்கு பகுதி

அடிமைகளாய் இருந்து ஆத்தா சொன்னதை சமத்தாக செய்த கூட்டமிது, புது எசமான் என்ன சொன்னாலும் தட்டாமல் செய்வார்கள், சிந்திக்க அவர்களுக்கு தெரியாது


நடராசனுக்கு நடைபெற்ற உறுப்பு மாற்று சிகிச்சையில் சந்தேகமும் மர்மமும் இருக்கின்றது : தமிழிசை

அட போங்க மேடம், இந்த அதிமுக ஆட்சியில் எல்லா நோயும், சிகிச்சையும் மர்மாமகவே இருக்கின்றது

ஜெயலலிதா தொடங்கி இப்பொழுது மர்ம காய்ச்சல் பலி வரை எல்லாமும் அப்படித்தான், நடராஜனும் அப்படித்தான்

இதில் நீங்கள் இப்பொழுதுதான் “நடுவில் கொஞ்ச பக்கத்தை காணோம்” என கிளம்புகின்றீர்கள், டூ லேட்