தலையினை பிய்த்து கொண்டிருக்கின்றார் டிரம்ப்
இந்த சூயஸ்கால்வாய் என்றொரு கால்வாய் எகிப்தில் உண்டு , ஐரோப்பாவினையும் ஆசியாவினையும் இணைக்கும் கடல்பாதை அது
அதை தோண்டியது பிரிட்டனும் பிரான்ஸும் என்றாலும் அது அமைந்திருப்பது எகிப்தில் என்பதால் அது எகிப்துக்கு சொந்தமானது என்றார் கர்ணல் நாசர்
அரபுகளின் தன்னிகரற்ற தலைவனாக விளங்கிய நாசர், ஒரு கட்டத்தில் அதை எகிப்தின் நாட்டுடமை ஆக்கினார், போராட வந்த பிரிட்டனை விரட்டி அடித்தார்
அதன் பின் ஐநா படைகள் வந்ததும், போதாகுறைக்கு இஸ்ரேல் நாசரை வீழ்த்தியதும் வரலாறு இன்று அந்த முக்கிய கால்வாய் வெள்ளையரின் கட்டுபாட்டில் சென்றுவிட்டது
அப்படி இந்த ஈரானின் ஹோர்ம்ஸ் சந்தியினை சர்வதேச கட்டுபாட்டில் கொண்டுவரை அமெரிக்கா படாதபாடு படுகின்றது
ஆனால் டிரம்பினை நம்பமுடியாது அவர் ஒருமாதிரி என உலகநாடுகள் கருதுவதால் யாரும் அவர்பின் செல்ல தயாராக இல்லை
இதனால் என்ன செய்வது என தெரியாமல் தலையினை பிய்த்து கொண்டிருக்கின்றார் டிரம்ப், ஈரான் ஒரு மாதிரி சிரிகின்றது