தலையினை பிய்த்து கொண்டிருக்கின்றது உலகம்

1950ல் இருந்து அமெரிக்காவின் கண் காஷ்மீரில் இருந்தது, மூன்றாம் நாட்டின் தலையீடு வேண்டும் என அது சொல்லிகொண்டே இருந்தது

எத்தனையோ முறை அச்சிக்கல் தீரும் வாய்ப்பு இருந்தபொழுதெல்லாம் அது நேரடியாக அல்லது மறைமுகமாக தடுத்தே வந்தது

காஷ்மீரில் ஒரு நாள் ராணுவதளம் அமைக்க வேண்டும் என்பது பெண்டகனின் கனவுதிட்டங்களில் ஒன்று

இதனால்தான் நேரு முதல் இந்திரா வரை தயங்கினார்கள், காஷ்மீர் என்றவுடன் அமெரிக்கா வந்துவிடும் என பலமுறை யோசித்தார்கள்

இப்பொழுது காஷ்மீருக்கான சலுகைகள் ரத்து செய்தபின்னும் டிரம்ப் எனும் வம்பானவரிடம் இருந்து சத்தமே இல்லை

அமெரிக்க அதிபர்களிலே இவர் பலவீனமானவரா இல்லை அந்நாட்டு அதிபர்களில் ஒரே ஒரு நல்லவரா என தெரியாமல் தலையினை பிய்த்து கொண்டிருக்கின்றது உலகம்