தலைவிக்கு கோவில் கட்டியது யார்?
அந்த ராஜபாட்டை நிகழ்ச்சியில் குஷ்பு தனக்கு கோவில் கட்டிய செய்தி தாமதமாக தெரிந்தது என சொன்னார்
ஆனால் கோவில் கட்டியது யார் என அவருக்கு இன்னும் தெரியவில்லை
திருச்சியில் கட்டியது Periya Samy என்பதும், வேலூரில் நிலத்தடி கோவில் கட்டியது Dhurai Sathish என்பதும் அவருக்கு என்று தெரியபோகின்றது?
வேலூரில் தலைவிக்கு பொற்கோவில் கட்டும் திட்டம் இருந்தது, அதைத்தான் அந்த இந்து ஆலயம் காப்பி அடித்து முந்தி கொண்டது என்பதை எல்லாம் சொல்ல போவது யார்?
இந்த பாழாய் போன டிரம்ப் மட்டும் வரவில்லை என்றால் அமெரிக்காவிலே தலைவிக்கு Venkatesh Mothilal என்பவர் கோவில் எழுப்பி இருப்பார் என்பதை சொல்லபோவது யார்?
அந்த தியாக வரலாறுகள் தலைவிக்கு தெரியாமலே அவரின் புகழ்வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கின்றது
தலைவிக்கு மட்டுமல்ல, தலைவியின் ரசிகர்களுக்குள்ளும் ஆயிரம் கதைகள் புதைந்திருக்கின்றன