தலைவியினை விட்டுவிடு..

பர்மாவுக்கு சென்ற தங்க தலைவி பற்றி மேலதிக தகவல் இல்லை

பர்மாவின் தென் எல்லை கடத்தலுக்கு பெயர்போன பகுதி என்பதால் சங்கம் பெரும் வருத்தம் கொள்கின்றது, அச்சம் மேலோங்குகின்றது

ஒருவேளை 200 டன் பகோடாவின் தங்கத்தை விட விலைமதிப்பற்றவர் தலைவி என யாரும் கடத்திவிட்டார்களோ என்னமோ

பர்மா சீனாவின் கட்டுப்பாடு நாடு என்பதால், அருணாசல பிரதேசத்தை கொடுத்தால்தான் குஷ்புவினை விடுவிப்போம் என சீனா ரகசியமாக மிரட்டவும் வாய்ப்பு இருக்கின்றது

“ஏ கடத்தல்காரனே

தலைவியினை விட்டுவிடு, பர்மாவுக்கு தங்க கோபுரங்கள் உண்டு. தமிழ்நாட்டுக்கு எங்கள் தலைவியினை விட்டால் யார் உண்டு..?

ஏ ஜின்பெங்கே.

. மாமல்லபுரத்து சிற்பங்களை விட தலைவி பொக்கிஷம், இதனால் இந்திய அரசு கண்டிப்பாய் வழிக்கு வரும் என்றுதானே கடத்த சொன்னாய், உங்கள் நாட்டில் வேறு கெரோனா வைரஸ் பரவுகின்றதாம்

தயவு செய்து மாமல்லபுர சிற்பங்களை வைத்துகொள், தலைவியினை விட்டுவிடு..”