தலைவியின் குரல்
வாவ்…………
எங்கிருந்தோ ஒரு சிங்கம் உறுமுகின்றது அது எந்த சிங்கத்தின் குரல் என கேட்டால் அது தலைவியின் குரல்
திரைதுறையில் இருந்து முதல் குரலாக, திகவுடன் கள்ள கூட்டு வைத்திருந்தாலும் காங்கிரசின் முதல் குரலாக வருகின்றது தலைவியின் குரல்
ஆம், நீதி நேர்மை நியாயம் உண்மை தைரியம் வீரம் தன்னபிக்கை மதிநுட்பம் இவை கலந்த அஷ்ட நாயகி எம் தலைவி
தலைவி சில காலம் பெரியாரிஸ்டாக இருந்தார், அதன் அசிங்கமான உள்நோக்கத்தை ஆபத்தான வேர்களை கண்டபின் வெளியேறினார்
இதோ சரியான நேரத்தில் சரியான வார்த்தையினை சொல்லிவிட்டார்
தலைவி சொன்னதால் கோடான கோடி ரசிக கண்மணிகளை கொண்ட குஷ்பு சங்கம் ரஜினிக்கு ஆதரவு தெரிவிக்கின்றது
மேலதிக உத்தரவுகளை தலைவியிடம் இருந்து எதிர்பார்த்து சங்கம் போருக்கு தயாராக இருக்கின்றது
ஆக ரஜினி ரசிகர்களே, உங்களுக்கான கூடுதல் பலம் தலைவியால் கிடைத்தாயிற்று, ரஜினி பக்கம் ஆண்டவன் இருக்கின்றான், அவன் ஒருபக்கம் இருக்கட்டும்,
இப்பொழுது தலைவி அவருடன் நிற்பதுதான் ஆண்டவனுக்கே பலம்..
