தலைவி குஷ்புவிடம் கமலஹாசன் மரியாதையாக வாழ்த்து பெறவேண்டும்

Image may contain: 1 person, close-up

இந்த கமலஹாசன் என்பவர் கலைஞரிடம் வாழ்த்துபெற்றதை வரவேற்கலாம்

ஆனால் ரஜினி, விஜயகாந்த் என தொடர்ந்து யாரிடமெல்லாமோ வாழ்த்து பெறுகின்றாராம்

தலைவி குஷ்புவிடம் கமலஹாசன் மரியாதையாக வாழ்த்து பெறவேண்டும் என சங்கம் எச்சரிக்கின்றது

தலைவியினை விட மிக சிறந்த அரசியல்வாதி யாருண்டு? ரஜினிக்கும் கமலுக்கும் முன்பே அரசியல் களம் கண்ட அரசியல்வாதி அவர்தான்

ஆக கமலஹாசன் குஷ்புவிடம் ஆசி வாங்காமல் செல்வது அரசியல் நாகரிகமாகாது, அறம் ஆகாது, அரசியல் தர்மம் ஆகாது என சங்கம் மிக கடுமையான கருத்துக்களை பகிர்கின்றது

அரசியலை விடுங்கள், எத்தனை படத்தில் குஷ்பு படத்தில் சைடு ஆர்டிஸ்டாக கமல் நடித்திருக்கின்றார், அந்த நன்றி வேண்டாமா?

கமலஹாசன் ஒழுங்காக சாந்தோம் பகுதி தலைவி இல்லம் சென்று தலைவியிடம் ஆசிவாங்குவது அவருக்கு நல்லது

நல்ல அரசியல் எதிர்காலம் வேண்டுமென்றால் அதனை கமல் செய்யட்டும் இல்லாவிட்டால் எப்படியும் நாசமாய் போகட்டும்.