தலைவி நலம்பெற்று வர எல்லா ஆலயங்களிலும் பிரார்த்திப்போம்
தலைவிக்கு அறுவை சிகிச்சை என செய்திகள் சொல்கின்றன, இருக்கும் தலைவர்களின் அலுவலர்களிலே மகா மோசமானவர்கள், அல்லது ஒரு மாதிரியானவர்கள் குஷ்பூ அலுவலக ஊழியர்கள்
ஏதோ முன்னாள் போயஸ் தோட்ட ஊழியர்கள் போல அப்படி ஒரு இறுமாப்பு.
தலைவி பற்றி கேட்டால் ஏதோ அவர்களின் சொத்துகணக்கினை கேட்டது போல குதிக்கின்றார்கள்.
தலைவி சிகிச்சை குறித்து அவர்களிடம் கேட்டால் அப்படி ஒன்றும் இல்லையே, உங்களுக்கெல்லாம் ஏன் பதில் சொல்ல வேண்டும் என்பது போன்ற பதில்கள் வருகின்றன
ஆனால் பத்திரிகை செய்திகள் அவருக்கு சிகிச்சை நடப்பதை சொல்கின்றன.
இந்த அலுவலக அல்ட்ராசிட்டிகள் ஜெயாவிற்கு சசிகலா இருந்ததை போன்றவர்கள் போலும், இதை பற்றி பின்பு தலைவிக்கு தெரிவிக்கபடும்
தலைவி நலம்பெற்று வர எல்லா ஆலயங்களிலும் பிரார்த்தித்து கொள்வதை விட ஒரு விஷயமும் முக்கியமல்ல
விரைவில் பூரண நலம்பெற்று அவர் வரட்டும், அதற்கு எல்லா தெய்வங்களும் அருள் புரியட்டும்.
நடிகை என்பதை தாண்டி காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவராகிவிட்ட தலைவியினை தொண்டர்கள் விசாரிப்பதை புறக்கணிக்கும் அந்த அலுவலக ஊழியர்களை சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது.