தாக்குதலுக்கு திட்டம் தயார் என்கின்றார் டிரம்ப்
டிரம்ப் விட்ட சவாலுக்கு இன்னும் 24 மணிநேரம் உள்ள நிலையில் அவர் கட்டளைபடி ஒரு விஷயம் நடந்திருக்கின்றது
சைப்ரஸ் நாட்டில் உள்ள அமெரிக்க பிரிட்டன் முகாமில் இருந்து பிரிட்டனின் போர் விமானம் சிரியாவில் நுழைந்து எச்சரித்துவிட்டு திரும்பியிருக்கின்றது
அது திரும்பிய சில நொடிகளில் தாக்குதலுக்கு திட்டம் தயார் என்கின்றார் டிரம்ப்
சிரியாவின் மீதான விமான தாக்குதலை முறியடிக்க சில ஆயுதங்களை கொடுத்திருக்கின்றது ரஷ்யா
அருகில் இஸ்ரேல் அட்டகாசம் வேறு. அவர்களும் நிச்சயம் தாக்குவார்கள்
ஏன் என்றால் நம் காவிரி கதைதான். வறண்ட இஸ்ரேலின் ஒரே நீர் ஆதாரம் ஜோர்டான் ஆறும் இன்னும் சில ஓடைகளும்
இவை எல்லாம் சிரியாவின் கோலன் பகுதியில் உற்பத்தி ஆவதால் அன்றே பிடித்து வைத்திருக்கின்றது இஸ்ரேல். இது சிரிய பகுதி என்பதால் அடிக்கடி சிரியாவிற்கும் இஸ்ரேலுக்கும் உரசும்
சிரியாவிற்கு அதனை கொடுக்கவே கூடாது என்ற முடிவில் இருக்கும் நாடு இஸ்ரேல்
இதனால் இஸ்ரேலிய விமானங்களும் தாக்கும்
ஆனால் அடையாளத்தை மாற்றி மர்ம விமானமாக முடிந்தால் வேற்று நாட்டு அடையாளம் கொண்ட விமானமாக தாக்கிவிட்டு வந்துவிடும், இது இஸ்ரேலிய பாணி
எப்படியோ பிரிட்டனின் போர் விமானங்கள் சிரியபரப்பில் நுழைந்து திரும்பியிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றது