தாலந்து உவமை
பைபிளில் ஒரு காட்சி உவமை உண்டு, அதாவது தாலந்து உவமை என்பார்கள்
ஒரு பணக்காரன் தன் வேலையாட்களுக்கு 5 தாலந்து,2 தாலந்து , 1 தாலந்து என அந்நாளைய பணத்தை கொடுத்துவிட்டு வெளியூர் சென்றுவிட்டான்
வந்து முதல் வேலைக்காரனிடம் 5 தாலந்தை என்ன செய்தாய் என கேட்டான் அவன் 10 ஆக்கிவிட்டேன் என்றான் வெரிகுட் என மகிழ்ந்தான் பணக்காரன்
இரண்டமவன் 4 ஆக்கிவிட்டேன் என்றான் மகிழ்ந்தான் பணக்காரன்
மூன்றாமவனிடம் நீ என்ன செய்தாய் என கேட்டான்? மன்னா நீர் வந்து கேட்பீர் என அப்படியே வைத்திருக்கின்றேன் என்றான் வேலைக்காரன், அவன் முதுகிலே சாத்தினான் அந்த எஜமான்
இந்த கதை இப்பொழுது எதற்கு என்றால் சவுதிக்கு அமெரிக்கா வழங்கும் பேட்ரியாட் ஏவுகனைகள் விவகாரம்
தற்பொழுது ஏமனில் இருந்து ஈரானிய ஆதரவு கிளர்ச்சிகாரர்கள் வீசும் ஏவுகனை நாளை யுத்தம் என வந்தால் ஈரானிய ஏவுகனை என எதிர்பார்க்கும் சவுதி பேட்ரியாட் ரகங்களை வாங்க போகின்றது
இதில் எதற்கு தாலந்து விவகாரம்
முன்பு சதாமின் ஸ்கர்ட் ஏவுகனைகள் இஸ்ரேலை தாக்கியபொழுது அமெரிக்கா பேட்ரியாட் ஏவுகனைகளை இஸ்ரேலுக்கு கொடுத்தது
முதன் முதலில் பேட்ரியார் சிஸ்டம் சோதிக்கபட்டது அங்குதான், ஆனால் அது முழு வெற்றி கொடுக்கவில்லை என்பது வேறுவிஷயம்
சதாமிடம் போதுமான ஸ்கர்ட் இல்லாததால் தப்பித்தது இஸ்ரேல்
அதன் பின் என்னாயிற்று? அமெரிக்கா கொடுத்த ஸ்கர்ட் ஏவுகனையினை அமெரிக்காவுக்கு தெரியாமல் அக்குவேறு ஆணிவேறாக பிரித்த இஸ்ரேல் அந்த குறைபாட்டை சரிசெய்து தன் சொந்த ஏவுகனை “ஆரோ” என மாற்றி கொண்டது
அது அமெரிக்காவின் பேட்ரியாட்டை விட பன்மடங்கு சிறப்பான எதிர்ப்பு ஏவுகனையாக இஸ்ரேலிடமே இருக்கின்றது
அமெரிக்காவுக்கு அது பெரும் கடுப்பு
இனி சவுதியிடம் கொடுக்கும் பேட்ரியாட் ஏவுகனை என்னாகும்?
ஒன்றும் ஆகாது அப்படியே இருக்கும், ஒரு ஸ்குரு தவறி விழுந்தாலும் அதை மாட்ட அமெரிக்காதான் வரவேண்டும்
இப்பொழுது அந்த தாலந்து கதையினை நினைத்து பாருங்கள், பொருத்தமாக இருக்கும்