தாவீதும் Unconditional Love என்பதில் உறுதியாக இருந்திருக்கலாம்

“பிறர் தாரத்தை விரும்பாதிருப்பாய்” என்கின்றது பைபிள், கடவுள் கொடுத்த 10 கட்டளைகளில் அதுவும் ஒன்று.

அதுவும் சாவுக்குரிய பாவங்களில் ஒன்று

பைபிளின் மிக பிரமாதமான அரசன் தாவீது, இன்றுவரை யூதர்களின் கனவு அரசன் அவனே.

இந்துக்களுக்கு ராமனும் கண்ணனும் போல யூதர்களுக்கு தாவீது

தாவீது போர், வீரம், ஆட்சி, இசை என சகலகலா வல்லவன். பைபிளின் சங்கீதங்கள் எனப்படும் பாடல் அவன் கொடுத்ததே

இன்றும் உலக அமைதியினை நிர்ணயிக்கும் ஜெருசலேம் நகரை அவனே முதலில் பிடித்து யூதருக்கு கொடுத்தான், அவனே ஜெருசலமின் மதில்களை கட்டினான்.

இஸ்ரேலின் மாபெரும் அடையாளம் அவனே, இன்றல்ல என்றும் அவனே

ஆனால் மனிதனின் வரலாற்றை படித்தால் ஏகபட்ட மனைவியர், அதுவும் பலர் இன்னொருவனின் மனைவியர்

இருக்கட்டும் அதனால் என்ன?

அவன் மற்ற இனத்தான் என்றால் விட்டுவிடலாம், ஆனால் யூத கடவுள் கொடுத்த 10 கட்டளையில் ஒன்றான பிறன் மனைவியினை விரும்பாதே எனும் கட்டளையினை மீறினால் எப்படி?

ஆனால் யூத தெய்வம் அதை மன்னித்து அவனை அரசனாக்கிற்று

அவன் அரசன் ஆனபின்பும் திருந்தினானா என்றால் இல்லை, தன் வேலைக்காரன் மனைவியினை கரெக்ட் செய்துவிட்டு பின் அவனை கொன்றுவிட்டு அவளையும் சேர்த்து கொண்டான்

இம்முறை யூத தெய்வத்துக்கு கோபம் வந்தது, ஏனென்றால் அவன் கொலை செய்துவிட்டானாம்

போர் ஏன ஏகபட்ட கொலைகளை செய்தவன் ஒரு பெண்ணுக்காக கொலை செய்தான் என்றவுடன் தெய்வம் வந்தது

வந்து என்ன செய்திருக்க வேண்டும்? பத்து கட்டளையினை மீறினாயா என தாவீதை கொன்றிருக்க வேண்டும்

ஆனால் செய்யவில்லை மாறாக அவனின் குழந்தையினை கொன்றது

தவறு செய்தவன் தாவீது, ஆனால் செத்தது ஒருபாவமும் அறியா குழந்தை

அதன்பின் என்னாயிற்று? ஊழியன் மனைவியினை மகாராணி ஆக்கினான் தாவீது

“இன்னொருவன் மனைவியோடு பெறும் குழந்தை நிலைக்காது, வேறோடு அழியும்” என்கின்றது பைபிள்

ஆனால் ஊழியக்காரனின் மனைவி பெத்சபா என்பவளோடு தாவீது பெற்ற குழந்தைதான் சாலமோன்

ஆம் ஞானி என்றும், பெரும் வீரன் என்றும் இன்றுவரை உலகின் ஒப்பற்ற அறிவாளி என அறியபடும் சாலமோன்

மற்றவர்கள் செய்தால் அது பாவகுழந்தை நிலைக்காது, ஆனால் தாவீது செய்தால் அது ஞான குழந்தை நிலைக்கும்

கடவுளின் கட்டளைக்கும் தாவீதுவாழ்வின் சம்பவங்களுக்கும் ஏன் இவ்வளவு முரண்?

ஆக உண்மையான காதல் என்றால் சில விதிவிலக்குகளை பைபிளில் அந்த தெய்வம் கொடுத்திருக்கும் போல‌

தாவீதும் Unconditional Love என்பதில் உறுதியாக இருந்திருக்கலாம், அது அந்த தெய்வத்துக்கும் புரிந்திருக்கலாம்