திங்கள் : காலை கதிர்கள்….

இமைக்கா நொடிகள்..” படத்தில் மேக்கப் இல்லாமல் நடிக்கிறார் நயன்தாரா.

“இதையும் தாங்கும் இதயத்தை “நண்பர் Babu Rao அவர்களுக்கு இறைவன் அருளட்டும்,

மிஸ்டர் Babu Rao எப்படி இந்த அக்கினி பரிட்சையினை எதிர்கொள்ள போகின்றீர்??


பிடல் காஸ்ட்ரோவின் பெயரை அரசு நிறுவன கட்டிடங்கள், தெருக்கள், பூங்காக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு சூட்டக் கூடாது , மார்பளவு சிலை, முழு அளவு சிலை மற்றும் மணி மண்டபங்கள் அமைக்கபட மாட்டாது, காஸ்ட்ரோ விருப்பமும் அதுவே : ரவுல் காஸ்ட்ரோ கியூப அதிபர்

ஸ்டிக்கர் பிளட் பாய்ஸ், சன் குரூப் பிரதர்ஸ் போன்ற அல்ட்ராசிட்டிகள் எல்லாம் கவனித்துகொள்வது நல்லது

அவர்களை சொல்லி என்ன?, பாரத பிரதமரே சிம்கார்டு விளம்பரம் முதல் சிலிண்டர் வரை எங்குபார்த்தாலும் சிரித்துகொண்டே இருக்கின்றார்.


அப்பல்லோ நிர்வாகத்திடம் ஆளுநர் நிலவரம் கேட்டறிந்தார், பிரதமர் மோடியும் ஆளுநரிடமிருந்து தகவல் பெற்றார்

நிச்சயம் இருவரும் என்ன நிலவரம் என சொல்லபோவதே இல்லை, ஒரு காலமும் இருவரும் சொல்லமாட்டார்கள்

இவர்கள் யாரை சந்தித்தால் என்ன?, என்ன தகவல்களை பகிர்ந்தால் என்ன?

இருவர் வாயிலும் இருக்கும் பெவிக்கால் அப்படி…


ஜியோ விளம்பரத்தில் மோடி புகைப்படம்.. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.500 அபராதம்!

மோடியின் இரும்பு ஆட்சியில் அபராத தொகை பார்த்தீர்களா? எப்படி பட்ட பெரும் அபராதம், இனி ரிலையன்ஸே திவாலாகிவிடாதா?

இருக்கட்டும்

அடிக்கடி அம்பானியுடன் போஸ் கொடுக்கும் பிரதமருக்கு ஒரு நாலாணவோ எட்டணாவோ அபராதம் விதிக்கும்படி யாராவது கேட்க கூடாதா?